இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தினசரி பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ளன. கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்துள்ளன. எனவே, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
இந்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இந்த தொற்றுநோய் காலத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்புகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ செலவுகளுக்காக, ஒரு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டம் கொரோனா ரக்ஷ்க் பாலிசி திட்டமாகும். இது கோவிட் பாசிட்டிவ் என கண்டறியப்பட்டால் பாலிசிதாரர்களின் மருத்துவ செலவுகளை கவனித்துக்கொள்ளும்.
இந்த கொரோனா ரக்ஷ்க் பாலிசி திட்டத்தை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் மூலமாக பெறலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) கோவிட் காப்பீட்டுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
எஸ்பிஐ கொரோனா ரக்ஷ்க் பாலிசி ஒரு சுகாதார பாதுகாப்பு காப்பீட்டு திட்டம்.
இந்த கொரோனா ரக்ஷ்க் பாலிசி என்பது மருத்துவ பரிசோதனை இல்லாத எளிமைப்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டமாகும். மேலும் காப்பீட்டுத் தொகையின் 100 சதவீத மொத்த தொகையையும் சிகிச்சையின் போது வழங்குகிறது.
இந்த கொரோனா ரக்ஷ்க் பாலிசியை வாங்க குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
இந்த பாலிசியின் முக்கிய அம்சம் ஒருமுறை பிரீமியம் கட்டினால் போதுமானது.
இந்த பாலிசிக்கான குறைந்தபட்ச ஒற்றை பிரீமியம் வரம்பு ரூ .156.50 மற்றும் அதிகபட்சம் ரூ .2,230 ஆகும்.
இந்த காப்பீட்டின் பாலிசிக் காலம் 105 நாட்கள், 195 நாட்கள் மற்றும் 285 நாட்கள் ஆக உள்ளது.
எஸ்பிஐ கொரோனா ரக்ஷ்க் பாலிசி, குறைந்தபட்சம் ரூ .50,000 மற்றும் அதிகபட்சமாக ரூ .2,50,000 வரை பாலிசித் தொகை கிடைக்க உறுதி அளிக்கிறது.
எனவே, உங்களது சிகிச்சையின் போது உங்களுக்கு ரூ.50,000 கிடைக்க, 105 நாட்கள் பாலிசி கால அளவிற்கு, பிரீமியம் தொகையாக ரூ .156.50ஐ செலுத்த வேண்டும்.
இந்த பாலிசி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 022-27599908 என்ற எண்ணுக்கு நீங்கள் மிஸ்டுகால் அழைப்பை வழங்கலாம்.
உங்கள் எஸ்பிஐ கொரோனா ரக்ஷ்க் பாலிசி பிரீமியத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆயுள் காப்பீட்டு கால்குலேட்டர் மூலம் கணக்கிடலாம்.
எஸ்பிஐ கோவிட் இன்சூரன்ஸின் கொரோனா ரக்ஷ்க் பாலிசியை ஆன்லைனில் வாங்குவது எப்படி?
நீங்கள் எஸ்பிஐ கொரோனா ரக்ஷ்க் பாலிசியை வாங்க விரும்பினால், நீங்கள் எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்
உங்கள் பிரீமியத்தை கணக்கிட்டு கொள்ளவும், பின்னர் உங்களது தனிப்பட்ட விவரங்கள், மருத்துவ விவரங்களை பூர்த்தி செய்து பணம் செலுத்தலாம்.
இந்த பெருந்தொற்றுக் காலத்தில் இந்த பாலிசியை எடுத்து பயன் பெறுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.