அடிதூள்.. பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி தரும் வங்கி இதுதான்!

முதலீட்டாளர்கள் மத்தியில் பிக்சட் டெபாசிட் மிகவும் பிரபலம்.

sbi interest : ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் பிக்சட் டெபாசிட் மிகவும் பிரபலம். பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகளுக்கு அதிக வருவாய் கிடைத்தாலும், வாடிக்கையாளர்கள் அதிகம் பிக்சட் டெபாசிட் முதலீடு செய்வதற்கு காரணம் நிரந்தர வைப்பு வட்டி என்பது உறுதியானது மற்றும் சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப மதிப்புகுறையாது.

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம்! எந்தெந்த வங்கியில் தெரியுமா?

பிக்சட் டெபாசிட் இரண்டு வகைப்படும்: ஒன்று வரி சேமிப்ப எஃப்டி மற்றொன்று ரெகுலர் எஃப்டி. வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட் கணக்குகள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு கால லாக்-இன் பீரியட் தேவைப்படுகிறது மற்றும் இடைப்பட்ட காலத்தில் பணத்தை எடுக்க முடியாது. ரெகுலர் எஃப்டி கணக்கில் உரிய காலத்துக்கு முன்னரே வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

ரெகுலர் எஃப்டிக்களில் செய்யப்படும் முதலீடுகளில் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. வட்டி அளவு ரூ. 10,000 தாண்டினால், வங்கி ஆண்டொன்றுக்கு 10% என்கிற கணக்கில் வரி பிடித்தம் செய்துகொள்ளும். மேலும் இங்கு வருமான வரியை சேமிக்க உதவும் வரி சேமிக்கும் எஃப்டிக்களும் உள்ளன.

எஃப்டிக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை ஃபிக்ஸ் செய்து கொள்ளும் வசதியை வழங்குகின்றது. ஏழு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை வெவ்வேறு கால அளவுகள் வழங்கப்படுகின்றன. ஒரு வங்கி கணக்கு இருந்தாலும், இல்லையென்றாலும் எஃப்டி தொடங்கலாம். உரிய காலத்திற்கு முன்னரே பணத்தை எடுத்துக்கொள்வது போன்ற வலைகளில் சிக்காமல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பொருத்தமான திட்டங்கள தேர்ந்தெடுக்க வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஹோம் லோன் வாங்க வங்கிக்கு போறீங்களா? இதை படிச்சிட்டு போங்க!

கீழ்கண்ட வட்டி விகிதங்களை கணக்கில் கொள்ளுங்கள்: ஒரு கோடி ரூபாய் வரை மதிப்புள்ள பிக்சட் டெபாசிட்ஒரு வருட காலத்திற்கு கொடுக்கக்கூடிய வட்டி விகிதங்கள்: எஸ்பிஐ – 6.65%, ஐசிஐசிஐ வங்கி – 6.60%, ஹச்டிஃப்சி வங்கி – 6.85%, ஆக்ஸிஸ் வங்கி – 7.10%, பஞ்சாப் நேஷனல் வங்கி -6.60%

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close