SBI cuts MCLR, fixed deposit rates: எல்லோரது கனவும் வீடு வாங்க வேண்டும் என்பது தான். இவ்வாறு வீடு வாங்கும் கனவுடன் இருப்பவர்களுக்கு பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டு கடன் அளிப்பதில் பல சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கி வருகின்றது.
Advertisment
ஏற்கனவே எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் பெற்று இருப்பவர்களுக்கும் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகித அடிப்படையில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்து 5.4 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந் நிலையில், எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை உடனடியாக குறைத்துள்ளது.
இதே போல் எஸ்.பி.ஐ கடன்களுக்கு வழங்கியிருந்த 8.40 வட்டிவிகிதத்தை 8.25 சதவிகிதமாக குறைத்துள்ளது.
மேலும் இந்த வட்டி குறைப்பு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை வாடிக்கையாளர் நலன் கருதி மீண்டும் குறைக்க திட்டமிட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர் இடையே 0.30% முதல் 0.70% வரை வட்டி குறையும? என்ற எதிர்ப்பார்ப்பு மேலோங்கியுள்ளது. தற்போது ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக இருக்கிறது. இந்த வட்டியுடன் 2.25 சதவிகிதம் கூடுதல் வட்டி கணக்கிட்டால் 7.65 சதவிகிதம். இது தான் ரெப்போ வட்டி விகித அடிப்படையில் வரும் வட்டி.
இந்த வட்டியின் மீது 0.40% முதல் 0.55 சதவிகிதம் வரை கூடுதல் வட்டியை வைத்துக் கொண்டால் 8.05 முதல் 8.20 சதவிகிதம் வரை வட்டி வரும்.