sbi interest sbi bank interest state bank interest : நாம் ஒரு உடல்நலம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருந்தாலும், தங்களது பணத்தை பாதுகாப்பான அமைப்புகளில் முதலீடு செய்து போதுமான வருவாயை ஈட்ட வேண்டும் என்று எப்போதும் விரும்புவோர் இருப்பார்கள். நீங்கள் பிக்சட் டெபாசிட் கணக்கை தொடங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதை நீங்கள் வீட்டிலிருந்தே தொடங்கலாம். பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்கள் பிக்சட் டெபாசிட் கணக்கை ஆன்லைன் மூலமாகவே தொடங்க அனுமதிக்கிறது. முதலீட்டாளர்கள் எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக இதை எளிதாக செய்யலாம்.
Advertisment
அதற்கு முன்பு எஸ்பிஐ-யில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி என்ற விவரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை (எஃப்.டி) குறைத்து, முதல் இரண்டு ஆண்டுகளில் எஸ்பிஐ 0.20 சதவீதம் குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2020 செப்டம்பர் 10 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
திட்டங்கள் பொருத்து மாறுபடும் வட்டி விகிதங்கள்:
7 முதல் 45 நாட்கள்: 2.90 சதவீதம் வட்டி விகிதம்
46 முதல் 179 நாட்கள்: 3.90 சதவீதம் வட்டி விகிதம்
180 முதல் 210 நாட்கள்: 4.40 சதவீதம் வட்டி விகிதம்
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: 4.40 சதவீதம் வட்டி விகிதம்
1 முதல் 2 ஆண்டுகள்: 4.90 சதவீதம் வட்டி விகிதம்
2 முதல் 3 ஆண்டுகள்: 5.10 சதவீதம் வட்டி விகிதம்
3 முதல் 5 ஆண்டுகள்: 5.30 சதவீதம் வட்டி விகிதம்
5 முதல் 10 ஆண்டுகள்: 5.40 சதவீதம் வட்டி விகிதம்
மூத்த குடிமக்களுக்கான எஃப்.டி வட்டி விகிதங்கள்
7 முதல் 45 நாட்கள்: 3.40 சதவீதம் வட்டி விகிதம்
46 முதல் 179 நாட்கள்: 4.40 சதவீதம் வட்டி விகிதம்
180 முதல் 210 நாட்கள்: 4.90 சதவீதம் வட்டி விகிதம்
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: 4.90 சதவீதம் வட்டி விகிதம்
1 முதல் 2 ஆண்டுகள்: 5.40 சதவீதம் வட்டி விகிதம்
2 முதல் 3 ஆண்டுகள்: 5.60 சதவீதம் வட்டி விகிதம்
3 முதல் 5 ஆண்டுகள்: 5.80 சதவீதம் வட்டி விகிதம்
5 முதல் 10 ஆண்டுகள்: 6.20 சதவீதம் வட்டி விகிதம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil