2 நாட்களுக்கு இந்த சேவைகள் எல்லாம் கிடையாது; எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவிப்பு

சீன ஹேக்கர்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து மோசடி வேலைகளில் ஈடுபடுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

sbi pension seva

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், பராமரிப்பு பணிகள் காரணமாக வங்கியின் பல சேவைகள் ஜூலை 10 ஆம் தேதி இரவு 10:45 மணி முதல் ஜூலை 11 அதிகாலை 12:15 மணி வரை இயங்காது என தெரிவித்துள்ளது. இதில் எஸ்பிஐ இணைய சேவைகளான YONO, UPI , YONO Lite சேவைகள் அடங்கும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது முக்கியமான பரிவர்த்தனைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மற்றொரு ட்விட்டர் பதிவில், இணைய மோசடிகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை தொடர்ந்து மாற்றிக் கொள்ளுமாறு வங்கி பரிந்துரைத்துள்ளது.

சீன ஹேக்கர்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து மோசடி வேலைகளில் ஈடுபடுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். KYC அப்டேட் செய்ய வேண்டும் என மெசேஜ் அனுப்பி ஒரு வெப்சைட் லிங்க்கை அனுப்புவதாக கூறப்படுகிறது. ஃபிஷிங் மோசடி மூலம் ஹேக்கர்கள் எஸ்பிஐ பயனர்களை ஏமாற்றி வருகிறார்கள். அதேபோல் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்குவதாக போலி மெசேஜ்கள் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அனைத்து தகவல்களும் மோசடி செயல்கள் என்பதால் இதை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi internet banking to remain inaccessible today

Next Story
லாக்கரில் உள்ள பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல; வாடிக்கையாளர்களை அதிர வைத்த ஆர்பிஐ!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com