Advertisment

ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குறது இனி ஈசி: சுலபத் தவணையை அறிமுகம் செய்த எஸ்பிஐ!

வாடிக்கையாளர்கள் 500 ரூபாய்க்கு மேல் வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் Flexipay முறையில் ஈஎம்ஐ-யாக மாற்றிக்கொள்ள முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குறது இனி ஈசி: சுலபத் தவணையை அறிமுகம் செய்த எஸ்பிஐ!

Business News in Tamil : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பல தனியார் வங்கிகளுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. தற்போதைய சூழலில் கடன் வழங்குதல் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில் எஸ்பிஐ முன்னிலையில் உள்ளது.

Advertisment

பெரும்பாலான தனியார் வங்கிகள், தங்களது வாடிக்கையாளார்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையை அதிகரிக்க, தனது வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கான தொகையைக் கடனாக அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் மீண்டும் வங்கிகள் செலுத்திய தொகையை ஈஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணைத் திட்டம் மூலம் திரும்பிச் செலுத்தும் வசதியை வழங்கி வருகிறது.

தனியார் வங்கிகளில் பிரபலமாக உள்ள இந்த சேவையை தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருளுக்கான தொகையை எஸ்பிஐ செலுத்தி விடும். பின், வாடிக்கையாளர் வாங்கிய கடனை, மாதத் தவணை திட்டமாக மாற்றிக் கொள்கிறது. இந்த சேவையில், தனியார் வங்கிகளைக் காட்டிலும் எஸ்பிஐ குறைந்த வட்டியையே வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுகிறது.

Flexipay என்ற பெயரில் எஸ்பிஐ அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த திட்டத்தில் இணைய, மே 9, 2021 வரையில் எவ்வித செயலாக்கக் கட்டணங்களும் விதிக்கப்படாது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 500 ரூபாய்க்கு மேல் வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் Flexipay முறையில் ஈஎம்ஐ-யாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் தற்போது 2,500 ரூபாய்க்கு அதிகமாக பொருள்களை வாங்கினால் மட்டுமே இந்த முறையின் கீழ் மாதத்தவணையாக மாற்ற முடியும்.

மாதத் தவணை காலமானது, 6 மாதம், 9 மாதம், 12 மாதம் மற்றும் 24 மாதம் வரையில் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் எந்தத் தொகைக்கும், எத்தனை மாதங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம், 1000 ரூபாய் மதிப்புக் கொண்ட ஒரு பொருளை Flexipay முறையில் 6 மாதத்திற்கு ஈஎம்ஐ செலுத்த வேண்டும் என்றால், மாதம் 177.5 ரூபாயை செலுத்தினால் போதுமானது. 12 மாதங்கள் என்றால், 93.5 ரூபாயும், 24 மாதங்கள் என்றால் 51.9 ரூபாய் என மிகவும் குறைந்த தொகையில் ஈஎம்ஐ-யாக செலுத்த முடியும். இந்த திட்டத்தின் மூலம் 1000 ரூபாய்க்கு வெறும் 52 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகையை ஈஎம்ஐ-யாக செலுத்தினால் போதுமானது.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையைப் பெற வேண்டுமென்றால் எஸ்பிஐ ஆன்லைன் கணக்கில் இணைய வேண்டும். 56767 என்ற எண்ணிற்கு FP என குறுந்தகவல் அனுப்பலாம். இல்லையெனில், 39 02 02 அல்லது 1860 180 1290 எண்ணிற்குக் கால் செய்வது மூலம் இந்தச் சேவையில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Sbi Bank Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment