/tamil-ie/media/media_files/uploads/2022/06/wealth-rupee-money-759.jpg)
நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருந்தால், ஓவர் டிராஃப்ட் வசதி தொடர்பாக வங்கியில் இருந்து பல தகவல்தொடர்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.
SBI Real Time Xpress Credit: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் யோனோவில் ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் (ஆர்டிஎக்ஸ்சி) வசதியை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் எளிதில் ஆன்லைனில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அதன்படி, சம்பள கணக்குள்ள வாடிக்கையாளர்கள் இப்போது YONO மூலம் RTXC ஐப் பெறலாம், இது முற்றிலும் காகிதமற்ற மற்றும் டிஜிட்டல் ஆகும்.
மத்திய, மாநில மற்றும் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.
இது குறித்து எஸ்.பி.ஐ தலைவர் தினேஷ் காரா, "யோனோவில் சம்பளம் கணக்குள்ள தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு ரியல்-டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் (RTXC) கடன் வசதியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில், எந்த தொந்தரவும் இல்லாமல் கடன் பெற முடியும்” என்றார்.
மேலும், “வங்கிச் சேவையை எளிமையாக்க, தொழில்நுட்பம் சார்ந்த மேம்பட்ட டிஜிட்டல் பேங்கிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.