SBI Kisan Credit Card Features : விவசாயிகள் தங்களின் நிலத்தில் அறுவடை செய்யும் போது ஏற்படும் செலவுகளை சமாளிக்க தேவையான கடன்களை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. தங்களின் கிஸான் கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கி வருகிறது.
கிஸான் கிரெடிட் கார்ட் என்றால் என்ன?
மற்ற கிரெடிட் கார்டுகளைப் போன்றது தான் கிஸான் கிரெடிட் கார்டுகளும். இந்த கணக்கில் இருக்கும் பேலன்ஸிற்கு வங்கி தரும் வட்டியும் கிடைக்கும். இந்த ஐந்து ஆண்டு வங்கிக் கணக்கு சேவையில் ஒவ்வொரு வருடமும் கூடுதலாக 10% பேலன்ஸ் வைக்கப்படும்.
கிசான் கிரெடிட் கார்டு ரூ. 3 லட்சம் வரை உடனடி கடன் வாங்குபவர்களுக்கு 3 சதவீத வட்டி மானியத்தை வழங்குகிறது. இது பயிர் காலம் மற்றும் பயிருக்கான சந்தைப்படுத்தல் காலத்தின்படி திருப்பிச் செலுத்தும் வசதியை வழங்குகிறது. 45 நாட்களுக்கு ஒருமுறை கார்டை ஆக்டிவேட் செய்தால் ரூ.1 லட்சம் விபத்து காப்பீட்டுடன் ரூபே கார்டுகளை வங்கி ஒதுக்கும்.
யார் இதற்கு விண்ணப்பிக்கலாம்?
விவசாயிகள் தனிநபராகவும், கூட்டாகவும் விண்ணப்பிக்க முடியும். நில உரிமையாளர்கள், குத்தகை விவசாயிகள், பங்கு பயிர் செய்யும் நபர்களும் இந்த சேவையை பெற இயலும். சுய உதவிக் குழுக்கள் அல்லது குத்தகை விவசாயிகள், பங்கு பயிர் செய்பவர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் விண்ணப்பிக்கலாம். வங்கி 3 லட்சம் வரை 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil