வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ புதிய அறிவிப்பு - மறுபடியும் பேங்க் போக வச்சுட்டாங்களே!!
SBI Update: வாடிக்கையாளர்கள், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அருகிலுள்ள கிளைக்குச் சென்று பின்வரும் ஆவணங்கள் / தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
நீங்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குகள் அல்லது பிற கணக்குகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ளதெனில், வாடிக்கையாளர்கள் தங்கள் KYC விபரங்களை பதிவிட எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வங்கி அனைத்து வாடிக்கையாளர்களின் KYC விபரங்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.
அதன்படி, எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுக்கு இந்த தகவலை அனுப்பிவிட்டதாகக் கூறியுள்ளது. KYC புதுப்பிப்பு கட்டாயம் என்று என்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது
Advertisment
Advertisements
அத்தகைய வங்கி அறிவிப்புகளைப் பெற்ற வாடிக்கையாளர்கள், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அருகிலுள்ள கிளைக்குச் சென்று பின்வரும் ஆவணங்கள் / தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
எஸ்பிஐ தனது பொது அறிவிப்பில், "28.02.20-க்கு முன்னர் அனைத்து எஸ்பிஐ பயனர்களும், தேவையான ஆவணங்களுடன் வங்கியில் தங்களின் KYC புதுப்பிப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
வங்கியின் உத்தரவுப்படி 28.02.20க்கு முன்னர் KYC இல்லாத/ தாமதமான கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.