பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. இதில் இடர்பாடும் குறைவு என்பதால், அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் விரும்புகின்றனர்.
மேலும் சில ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, வரி விலக்கு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை பொருத்தவரை அம்ரித் கலாஸ் ஃபிக்ஸட் டெபாசிட், வீ கேர் டெபாசிட் என பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
எஸ்.பி.ஐ 7 நாட்கள் முதல் பத்து வருடங்கள் வரை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகிறது.
இந்தத் திட்டங்களில் சாதாரண குடி மக்களுக்கு மூன்று சதவீதம் முதல் 7.1% வரை வட்டி வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு 0.50 வட்டி கூடுதலாக வழங்கப்படும்.
எஸ்.பி.ஐ அம்ரித் கலாஸ்
இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில், சாதாரண குடி மக்களுக்கு 7.1% வட்டியும்; மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதம் பட்டியும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கால அளவு நான் ஒரு நாட்கள் ஆகும்.
இது ஆகஸ்ட் 15ஆம் தேதியோடு முடிவு பெறுகிறது.
எஸ்.பி.ஐ வி கேர் டெபாசிட் திட்டம்
எஸ்.பி.ஐ வி கேர் டெபாசிட் திட்டம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கால அளவு ஐந்து முதல் 10 ஆண்டுகள் ஆகும். இதில் மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“