sbi வங்கி, எஸ்பிஐ லைஃப் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து கிராமீன் சக்தி என்ற காப்பீட்டுத் திட்டம் என்ற கிராமபுற மக்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நலிவடைந்த பிரிவினருக்கான காப்பீட்டுத் திட்டமாகும்.இதன்படி இந்த காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்பவர்கள் தினம் ஒரு ரூபாய் மட்டுமே காப்பீடு கட்டணமாக (பிரீமியமாக) செலுத்த வேண்டும்.
கிராமீன் சக்தி என்ற காப்பீட்டுத் திட்டத்துக்கான ஆண்டு பிரீமியத் தொகை ரூ.361. ஐந்து ஆண்டுகளுக்கு இதைத் தேர்வு செய்யலாம். காப்பீட்டுத் தொகை ரூ. 30 000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியான SBI வைப்பு நிதிக்கான வட்டியை அரை விழுக்காடு வரை குறைத்துள்ளது. வைப்பு நிதிக்கான வட்டி 46 முதல் 90 நாட்கள் வரை 4.5 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு இந்த திட்டத்தால் இலாபம்.
இதே போல் 180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரையிலான வைப்பு நிதிக்கான வட்டி 6.25% இல் இருந்து 6% ஆக குறைத்துள்ளது. ஒரு வருடத்திற்கும் அதிகமான வட்டி விகிதம் கால் விழுக்காடு குறைந்து 6.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களையும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் நலன் கருதி அறிவித்துள்ளது.