/tamil-ie/media/media_files/uploads/2019/04/VBKEDAPPADIDAY1jpg-1.jpg)
lic jeevan amar
sbi life insurance policy : பாரத ஸ்டேட் பாங்க் (எஸ்பிஐ), அதன் துணை நிறுவனமான எஸ்பிஐ லைஃப் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புற மக்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிராமீன் சக்தி என்ற காப்பீட்டுத் திட்டம் நலிவடைந்த பிரிவினருக்கான காப்பீட்டுத் திட்டமாகும்.இதன்படி இந்த காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்பவர்கள் தினசரி ஒரு ரூபாய் மட்டுமே காப்பீடு கட்டணமாக (பிரீமியமாக) செலுத்த வேண்டும்.
இந்த காப்பீட்டுத் திட்டத்துக்கான ஆண்டு பிரீமியத் தொகை ரூ.361. ஐந்து ஆண்டுகளுக்கு இதைத் தேர்வு செய்யலாம். காப்பீட்டுத் தொகை ரூ. 30 ஆயிரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வைப்பு நிதிக்கான வட்டியை அரை விழுக்காடு வரை குறைத்துள்ளது.வைப்பு நிதிக்கான வட்டி 46 முதல் 90 நாட்கள் வரை 4.5 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இதே போல் 180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரையிலான வைப்பு நிதிக்கான வட்டி 6.25% இல் இருந்து 6% ஆக குறைத்துள்ளது. ஒரு வருடத்திற்கும் அதிகமான வட்டி விகிதம் கால் விழுக்காடு குறைந்து 6.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தீடீரென்று அதிர்ச்சி தந்த எஸ்பிஐ..இனிமே கூடுதல் கட்டணம் வசூல்!
இந்த இரண்டு சிறப்பான திட்டங்களையும் வாடிக்கையாளர் நலன் கருதி எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்த பொன்னான நேரத்தை நீங்கள் உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.