கல்வி கடன் பெற நினைக்கும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் அல்லது குழப்பம். கல்வி கடன் பெறுவது எப்படி? எங்கு? குறைந்த வட்டியில் கல்வி கடன் அளிப்பது யார்? இதுப் போன்ற பல கேள்விகளுக்கு இன்று பதில் தெரிந்துக் கொள்ளலாம்
எஸ்பிஐ - யில் இருக்கும் கல்வி கடன் வசதிகள்:
இந்தியாவைப் பொறுத்தவரை, புரபஷனல் படிப்புகள் அனைத்திற்கும் கல்விக்கடன் பெறலாம். ஆனால், பல மாணவர்கள் சரியான வழிமுறை தெரியாமலும், வங்கிகளின் அலட்சியம் மற்றும் புறக்கணிப்பாலும் தங்களின் கல்விக் கடன் வாய்ப்புகளை இழக்கின்றனர்.
வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, நீங்கள் அதற்கு தகுதியான நபரா என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, வங்கிகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி அவர்கள் தகுதியானவர்களா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான வங்கிகள், 16 முதல் 26 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குகின்றன. அதேசமயம், வங்கிகளுக்கு இடையில், கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி விதிமுறைகளில் வேறுபாடுகளும் உண்டு.
எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி ஏடிஎம் சேவைக்கு இதுதான் கட்டணம்!
எஸ்பிஐ கல்விக் கடன் வகைகள் :
1.ஸ்காலர் லோன் இந்தியாவில் உள்ள ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஏயிம்ஸ் மற்றும் பிற பிரீமியம் கல்வி நிறுவங்களில் பயில இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். ஒருவரால் 30 லட்சம் ரூபாய் வரை இந்த கடன் திட்டம் கீழ் கடன் பெற முடியும்.
2. வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முழு நேர படிக்கும் மாணவர்களுக்கு குலோபள் எட்-வாண்டேஜ் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது.
3.இந்தியா மற்றும் வெளிநாடு என இரண்டு இடங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் மாணவர் கடன் கீழ் கடன் அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் கீழ் இந்தியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் 10 லட்சம் ரூபாய் வரையிலும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் 20லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெற முடியும்.
4.மாணவிகள் என்றால் வட்டி விதத்தில் கூடுதலாக 0.50 சதவீதம் வரை சலுகை பெறலாம். கடன் தவணையினை சரியாகச் செலுத்திக்கொண்டு வரும் போது கூடுதலாக 1 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது
5. இரண்டாம் முறையாகவும் கடன் பெற்று மேல் படிப்பை தொடரும் போது இரண்டாவது படிப்பை முடித்த 15 வருடத்தில் கடனை மொத்தமாக அடைக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.