/tamil-ie/media/media_files/uploads/2019/07/DSC02610-16.jpg)
statebank sbinetbanking
sbi loan home interest : இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியிடம், ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கும் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப் போகிறதாம்.மத்திய மைய கட்டுப்பாட்டு வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகித அடிப்படையில் ஏற்கனவே எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க ஆலோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
இந்த நடவடிக்கையால் வங்கியில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை, 2019- 20 நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலாவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.புதிதாக ஜூலை 2019-க்குப் பிறகு வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே ஆர்பிஐயின் ரெப்போ ரேட் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைத்தன. ஜூலை 2019-க்கு முன் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கவில்லை.
ஜூலை 2019-க்கு முன், 75 லட்சம் ரூபாய்க்குள் வாங்கிய வீட்டுக் கடன்களுக்கு, எஸ்பிஐ வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு 8.35 சதவிகிதம் முதல் 8.90 சதவிகிதம் வரை வீட்டுக் கடனுக்கு வட்டி வசூலித்து வருகிறார்கள். இது முந்தைய மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்ட் லெண்டிங் ரேட் (MCLR – Marginal Cost of Funds Based Lending Rate) அடிப்படையில் கணக்கிடப்பட்டவை.
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்
எஸ்பிஐ வங்கி, ரெப்போ ரேட் அடிப்படையிலான வட்டி விகிதத்தை அனைத்து வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கும் அமல்படுத்தினால் சுமாராக 8.05% முதல் 8.20%-க்குள் வீட்டுக் கடன் வாங்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.