Advertisment

எஸ்.பி.ஐ வங்கி உங்களுக்கு லோன் தர ரெடி!

சேவை மையங்கள் தொடங்க ஏராளமான கடன் திட்டங்களை இந்த வங்கி வழங்கி வருகின்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI debit card, Magstripe Debit Card, SBI Deactivates Magstripe Debit Card

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான sbi மிகக் குறைந்த கட்டணத்தில் கடன்களை அளித்து வருகிறது.

Advertisment

தனது வாடிக்கையாளர்களில் தொழில் முனைவோர்கள், தொழில் செய்யும் பெண்களுக்கு குறைந்த வட்டியில் தனிநபர் கடன்கள் மற்றும் தொழில் கடன்களை வழங்கி வருகிறது.

sbi வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தமக்கு சொந்த மான மண்ணில் தனியாக விவசாயம் செய்ய நினைக்குன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எஸ்.பி.ஐ மிகப் பெரிய வாய்ப்பை வழங்குகிறது.

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள, முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் அதிக கிளைகளை உடையது எஸ்.பி.ஐ வங்கி. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, உணவுப் பொருள் தயாரிப்பு, விவசாய வாணிகம், சேவை மையங்கள் தொடங்க ஏராளமான கடன் திட்டங்களை இந்த வங்கி வழங்கி வருகின்றது.

1) கிசான் கிரெடிட் கார்டு : விவசாயாக் கடன், இடுபொருட்கள் வாங்க இந்த கடன் அட்டை வழங்கப்படும்.

2) நகைக்கடன் (பட்டா நகல் இருக்க வேண்டும்), 3) விளைபொருள் சேமிப்புக் கடன்,

4) டிராக்டர், விவசாயக் கருவிகள், அறுவை இயந்திரம் போன்றவைக்கு வங்கிக் கடன்,

5) மலர் சாகுபடி/வணிகம்/இயற்கை முறை வேளாண்மைக்குக் கடன்,

(6) கிட்டங்கி அமைக்க, விளைபொருள் சேமிக்க குளிர்சாதன வதசிக்குக் கடன்,

(7) விவசாயம் மற்றும் உணவுப் படதப்படுத்தும் தொழில்கள் தொடங்க கடன் உதவி,

(8) பால்பண்ணை, கோழி, மீன், இதர கால்நடைகள் வளர்க்கக் கடன்,

9) நீர்ப்பாசன கடன் திட்டங்கள்,

(10) பழத்தோட்டம் / பண்ணை அமைக்க கடன்,

(11) விவசாய வணிகக் கடன் / சேவை மையம் தொடங்க கடன்.

கடன் பெறத் தகுதியுடைய நிரந்தர விவசாயிகள் ஆங்காங்கே உள்ள வங்கிக் கிளைகளை அணுகலாம்.

முழு விவரங்களை தெரிந்துக் கொள்ள எஸ்.பி.ஐ அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்லவும். www.sbi.co.in

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment