சொந்தமாக விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையா? எஸ்.பி.ஐ உங்களுக்கு லோன் தர ரெடி!

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

By: Published: January 30, 2019, 6:34:21 PM

www.sbi.co.in : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ மிகக் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை அளித்து வருகிறது. அதிலும் தொழில் முனைவோர்கள், தொழில் செய்யும் பெண்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் தனிநபர் லோன்கள் மற்றும் தொழில் கடன்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் சொந்த மண்ணில் தனியாக விவசாயம் செய்ய நினைக்குன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எஸ்.பி.ஐ மிகப் பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

நகர்ப்புறங்களைப் போலவே, கிராமப்புறங்களிலும் அதிக கிளைகளை உடையது எஸ்.பி.ஐ வங்கி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, உணவுப் பொருள் தயாரிப்பு, விவசாய வாணிகம், சேவை மையங்கள் தொடங்க ஏராளமான கடன் திட்டங்கள் இவ்வங்கியில் உள்ளன.

1) கிசான் கிரெடிட் கார்டு : விவசாயிகளுக்கு கடன் பெற, இடுபொருட்கள் வாங்க இந்த கடன் அட்டை வழங்கப்படும்.

2) நகைக்கடன் (பட்டா நகல் இருக்க வேண்டும்), 3) விளைபொருள் சேமிப்புக் கடன்,

4) டிராக்டர், விவசாயக் கருவிகள், அறுவை இயந்திரம் போன்றவைக்கு வங்கிக் கடன்,

5) மலர் சாகுபடி/வணிகம்/இயற்கை முறை வேளாண்மைக்குக் கடன்,

(6) கிட்டங்கி அமைக்க, விளைபொருள் சேமிக்க குளிர்சாதன வதசிக்குக் கடன்,

(7) விவசாயம் மற்றும் உணவுப் படதப்படுத்தும் தொழில்கள் தொடங்க கடன் உதவி,

(8) பால்பண்ணை, கோழி, மீன், இதர கால்நடைகள் வளர்க்கக் கடன்,

9) நீர்ப்பாசன கடன் திட்டங்கள்,

(10) பழத்தோட்டம் / பண்ணை அமைக்க கடன்,

(11) விவசாய வணிகக் கடன் / சேவை மையம் தொடங்க கடன்.

கடன் பெறத் தகுதியுடைய நிரந்தர விவசாயிகள் ஆங்காங்கே உள்ள வங்கிக் கிளைகளை அணுகலாம்.

முழு விவரங்களை தெரிந்துக் கொள்ள எஸ்.பி.ஐ அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்லவும். www.sbi.co.in

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi loans for farmers rules and regulation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X