வங்கிக் கடனாளிகள் இன்னும் கொஞ்சம் மூச்சு விடலாம்: எஸ்பிஐ கூறும் நல்ல செய்தி

SBI News: ரிசர்வ் வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கான அவகாசத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

By: May 21, 2020, 7:31:11 AM

SBI Loans Tamil News: இந்திய ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் மற்றும் தனி நபர் கடன் திரும்ப செலுத்தும் அவகாசத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க உள்ளது. இது குறித்து எஸ்பிஐ-யின் ஆய்வு என்ன சொல்கிறது?

நாடு தழுவிய ஊரடங்கை மே 31 வரை அரசு நீட்டித்துள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி கடன் தவனை திருப்பி செலுத்தும் அவகாசத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.


கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) நாலாவது கட்ட ஊரடங்கை மே 31 வரை அறிவித்தது.

கோவிட்-19 தொற்றை எதிர்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி முதல் கட்ட ஊரடங்கை மார்ச் 24 ஆம் தேதி 21 நாட்களுக்கு அறிவித்தார். முதலில் இது மே 3 வரையும் மீண்டும் மே 17 வரையும் நீட்டிக்கப்பட்டது.

மார்ச் 1, 2020 முதல் மே 31 2020 வரை அனைத்து கால கடன்களையும் திருப்பி செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசத்தை இந்திய ரிசர்வ் வங்கி, மார்ச் மாதம் அனுமதித்தது.

மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கான அவகாசத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் என எதிர்பார்க்கிறோம் என எஸ்பிஐ யின் ஆய்வு அறிக்கை Ecowrap கூறுகிறது.

இன்னும் மூன்று மாதங்களுக்கு அவகாசம் என்பது நிறுவனங்கள் ஆகஸ்ட் 31, 2020 வரை கடன்களை திருப்பி செலுத்த தேவையில்லை என்பதை குறிக்கிறது. இதன் பொருள் செப்டம்பர் மாதத்தில் நிறுவனங்கள் தங்கள் வட்டி கடன்களை வழங்குவதற்கான குறைந்தபட்ச வாய்ப்பு உள்ளது

வட்டி கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறினால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி கணக்கு செயல்படாத கடன்களாக (non-performing loans) வகைப்படுத்தப்படலாம்.

எனவே, தற்போதுள்ள கடன்களை விரிவாக மறுசீரமைப்பதற்கும் 90 நாள் விதிமுறைகளை மறுவகைப்படுத்துதலுக்கும் ரிசர்வ் வங்கி செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை வங்கிகளுக்கு வழங்க வேண்டும், என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஜூன் 7 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை கடுமையானது மற்றும் வங்கிகளுக்கு சிறிய நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi loans tamil news state bank of india home personal loans emi moratorium

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X