/indian-express-tamil/media/media_files/2025/05/07/ZNln6FzynBYwlnaAZq4B.jpg)
சாதாரண மக்களும் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செபி மற்றும் எஸ்.பி.ஐ இணைந்து சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதுதான் எஸ்.பி.ஐ மைக்ரோ எஸ்.ஐ.பி திட்டம். இந்த திட்டத்தின் முழு பெயர் எஸ்.பி.ஐ பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்ட் ஆகும்.
இந்தத் திட்டம் குறைந்த வருமானம் உடையவர்களுக்கும், சிறிய தொகையை சேமிக்க விரும்புபவர்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. உதாரணத்திற்கு, ரூ. 250 முதலீடு செய்தால் கூட லாபமாக ரூ. 1 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படி சாத்தியம் என தற்போது பார்க்கலாம்.
இந்த திட்டத்தில் நாள்தோறும் ரூ. 250 முதலீடு செய்ய வேண்டும். இதன் முதலீட்டு காலம் 25 ஆண்டுகள். இதற்காக 12 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில் 25 ஆண்டுகளில் ரூ. 16.50 லட்சத்தை முதலீடு செய்திருப்போம். இதன் வட்டியின் மூலமாக ரூ. 88.44 லட்சம் வரும். திட்டத்தின் முதிர்வு காலத்தின் போது நமக்கு ரூ. 1.04 கோடி கிடைக்கும்.
குறைந்த வருமானம் உடையவர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் சிறிய அளவில் சேமிக்க விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயனடையலாம். அவர்களுக்காகவே பிரத்தியேகமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக மேலும் சில நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில், நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை பெற இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கிறது. குறிப்பாக, சிறு சேமிப்புகளையும் முதலீடாக மாற்ற ஊக்குவிக்கிறது.
பங்குச் சந்தை முதலீடு என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் மிகக் குறைந்த முதலீட்டில் அனைவரும் பங்குச் சந்தையின் பலன்களை அனுபவிக்க முடியும் என்பதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.
எனினும், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
நன்றி - Boss Wallah (Tamil) Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.