/tamil-ie/media/media_files/uploads/2019/11/sbi-1-1.jpg)
SBI Online Services
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார மந்தநிலையை சமாளிப்பதற்காக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. இதன் வெளிப்பாடாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான் கொடுக்கும் கடன்களுக்கான (வீட்டுக்கடன், வாகனக் கடன்) வட்டி விகிதத்தையும் சில நாட்களுக்கு முன்பு குறைத்தது.
இருந்தாலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எந்த நல்ல செய்தியும் இதுவரை வந்தபாடில்லை. உதாரணமாக, சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ 3.50% to 3.25% என்ற கணக்கில் குறைத்தது தான் மிச்சம்.
இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் குறைந்த அளவு வைப்பு நிதியை வைக்காதவர்களிடம் வசூலிக்கப்படும் புது அபாராத தொகையை வெளியிட்டிருந்தது. இந்த விதிமுறைகள் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது .
அதை பற்றிய முழு விவரங்கள் இங்கே:
- பெருநகரம்/ மற்றும் நகர்புறங்களில் எஸ்பிஐ அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச வைப்பு நிதியாக - ரூ. 3000 பரமாரிக்க வேண்டும். இல்லையெனில் , கட்டணத் தொகையாக ரூ.10 முதல் 15 வரை + ஜிஎஸ்டி.
- புறநகரங்களில்( செமி-அர்பன்) எஸ்பிஐ அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச வைப்பு நிதியாக- ரூ. 2000 பரமாரிக்க வேண்டும் . இல்லையெனில் , கட்டணத் தொகையாக ரூ.7.5 முதல் 12 வரை + ஜிஎஸ்டி.
- கிராமங்களில் எஸ்பிஐ அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச வைப்பு நிதியாக- ரூ. 1000 பரமாரிக்க வேண்டும் . இல்லையெனில் , கட்டணத் தொகையாக ரூ.5 முதல் 10 வரை + ஜிஎஸ்டி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.