sbi minimum balance charges : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மினிமம் பேலன்ஸ் விதிமுறைகளில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ மாதம் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த குறைந்தபட்ச தொகை என்பது சேமிப்புக் கணக்கிற்கு மட்டுமே.
குறைந்தபட்ச இருப்புத் தொகை என்பது வாடிக்கையாளர்க்கு வாடிக்கையாளர் மாறக்கூடியது. வங்கியிருக்கும் இடம், எந்தளவு குறைந்துள்ளது என்பதை பொறுத்து அபராதக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
மெட்ரோ, நகர்ப்புறம், பாதி நகர்ப்புறம், மற்றும் கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு என தனித்தனியாக மினிமம் பேல்னஸ் அபராதக் கட்டணம் நிர்ணிக்கப்படுகிறது. இதுக்குறித்து விவரங்களை sbi.co.in. தெரிந்துக் கொள்ளலாம்.
மெட்ரோ நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம்!
ரூ. 50 முதல் 75 ரூ வரை செல்லும். இத்துடன் ஜிஎஸ்டி தொகையும் ரூ. 10 முதல் 15 ரூ வரை வசூலிக்கப்படும்.
எஸ்பிஐ வங்கி கிளை இருக்கும் இடத்தை நான்கு வகையாக பிரித்துள்ளது. அவை மெட்ரோ, நகர்ப்புறம், பாதி நகர்ப்புறம், மற்றும் கிராமம் என நான்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 -3,000 வரை குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும்.
பாதி நகர்புறங்களில் செயல்படும் வங்கிகள் விதித்துள்ள அபராத விதிமுறை!
ரூ. 50 முதல் 75 ரூ வரை செல்லும். இத்துடன் ஜிஎஸ்டி தொகையும் ரூ. 7 முதல் 12 ரூ வரை வசூலிக்கப்படும்.
கிராமங்களில் செயல்படும் எஸ்பிஐ வங்கிகள் செயல்படுத்தும் அபராத விதிமுறை!
ரூ. 50 முதல் 75 ரூ வரை செல்லும். இத்துடன் ஜிஎஸ்டி தொகையும் ரூ. 5 முதல் 10 ரூ வரை வசூலிக்கப்படும்.
மாதம் ரூ. 10 சேமித்தால் போதும்! எஸ்பிஐ-யின் புதிய சேவிங்க்ஸ் அக்கவுண்ட் இதுதான்!
வாடிக்கையாளர்கள் கட்டாயமாக குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். எஸ்பிஐயில் ஜன் தன் கணக்குகள், அடிப்படையான சேமிப்புக் கணக்குகள், சம்பள தொகுப்பு கணக்குகள், மற்றும் சிறு வங்கிக் கணக்குகள் ஆகியவற்றில் குறைந்த பட்ச தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சேமிப்புக் கணக்குகளை ஜீரோ பேலன்ஸில் கூட வைத்திருக்க முடியும்