SBI minimum balance : பொதுவாக வங்கி கணக்குகளைத் திறக்கும் போது ஒவ்வொரு மாதமும் மினிமம் பேலன்ஸ் தொகையை வங்கி கணக்கில் நிர்வகிக்க வேண்டும். இல்லை என்றால் வங்கிகள் அதற்கு ஏற்றார் போல அபராதங்களை விதிக்கும்.
மெட்ரோ நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கி கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் மினிமம் பேலன்ஸ் என அழைக்கப்படும் குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்வகிக்கவில்லை என்றால் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையில் அபராதத்துடன் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.
புறநகர் பகுதி எஸ்பிஐ வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்வகிக்கவில்லை என்றால் 7.50 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை அபராதம் + ஜிஎஸ்டியும், கிராமப்புற எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் கணக்கு திறக்கும் போது குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அபராதம் + ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.
மேலே கூறிய இந்த அபராதம் எல்லாம் சாதாரணச் சேமிப்பு கணக்கு நிர்வகிப்பவர்களுக்கு மட்டுமே ஆகும். கீழ் கொடுக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் எல்லாம் மினிமம் பேலன்ஸை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை.அடிப்படை சேமிப்பு கணக்கு
read more.. பர்சனல் லோன் என்றாலே பயந்து நடுங்கும் காலம் போயாச்சி! எஸ்பிஐ-யின் அசத்தல் லோன்கள்.
எஸ்பிஐ அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தனியாக அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட்டாகவும் திறக்கலாம். அடிப்படை ரூபே டெபிட் கார்டு ஒன்று அளிக்கப்படும். செக் டெபாசிட் இலவசம். வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய்க்குள் பணத்தை வைத்து இருக்கும் போது ஆண்டுக்கு 3.5 சதவீத வட்டி விகிதமும், 1 கோடிக்கும் அதிகமாக வைத்து இருக்கும் 4 சதவீத வட்டி விகித லாபமும் அளிக்கப்படும்.