எஸ்.பி.ஐ. வங்கியின் மினிமம் பேலன்ஸ் அபராதங்களிலிருந்து எப்படி தப்பலாம்?

அவசர கடன் உதவி  போன்ற எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு  கணக்குகளை வைத்துள்ளவர்களும் குறைந்தபட்ச இருப்பத் தொகையை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை.

அவசர கடன் உதவி  போன்ற எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு  கணக்குகளை வைத்துள்ளவர்களும் குறைந்தபட்ச இருப்பத் தொகையை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எஸ்.பி.ஐ,பணம்

எஸ்.பி.ஐ,பணம்

SBI Minimum Balance : எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) வைக்காமல் அபராதம் கட்டியிருக்கக்கூடும். மாதக்கடைசியில் சிலருக்கு அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கக்கூடும்.

Advertisment

வங்கி கணக்குகளை நிர்வகிக்க கூடுதல் செலவாகிறது என அபராத முறையை எஸ்.பி.ஐ. வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா அறிவித்திருந்தார். ஏப்ரல் 2017 முதல் இது நடைமுறையில் இருந்து வருகின்றது.

இந்த வகையில், பெருநகரங்களில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிகணக்குகளில்  ஒவ்வொரு  மாதமும் குறைந்தபட்ச தொகையை நிர்வகிக்காதவர்கள் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அபராதமும் அபராதத்திற்கு ஜிஎஸ்டியும்செலுத்தி வந்தனர்.

இதுவே புறநகர் பகுதி என்றால் 7.50 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை அபராதம் +  ஜிஎஸ்டியும்,  கிராமப்புற எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அபராதம்  + ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும். சாதாரண சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.

Advertisment
Advertisements

SBI Minimum Balance - அபராதம் இல்லாத கணக்கு!

குறைந்தபட்ச இருப்புத் தொகையின்றி கணக்கை வைத்திருக்க நினைப்பவர்கள் எஸ்.பி.ஐ. ஜீரோ பேலன்ஸ் (SBI Zero balance) என்ற அடிப்படை சேமிப்பு கணக்கு தொடங்கி, அதில் தங்கள் பண பரிமாற்றத்தை மேற்கொள்ள்ளலாம்.

அதே போல், பிரதமர் மோடி தொடங்கிவைத்த ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்கு,  அவசர கடன் உதவி  போன்ற எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு  கணக்குகளை வைத்துள்ளவர்களும் குறைந்தபட்ச இருப்பத் தொகையை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் படிக்க : சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பது தெரியும்.. ஆனா அந்த பிஎஃப்-க்கு எவ்வளவு வட்டி தெரியுமா?

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: