நோட் பண்ணிக்கோங்க... உங்க மாத வருமானத்திற்கு வழி காட்டும் எஸ்பிஐ!
SBI: எஸ்பிஐ நிரந்த்ர வைப்பு திட்டத்தில் கிடைக்கும் அதே வட்டி விகிதம் இந்த எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்டத்துக்கும் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவிகிதம் கிடைக்கும்.
SBI: எஸ்பிஐ நிரந்த்ர வைப்பு திட்டத்தில் கிடைக்கும் அதே வட்டி விகிதம் இந்த எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்டத்துக்கும் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவிகிதம் கிடைக்கும்.
SBI,State Bank of India,Money,SBI Online,Banking,Banking & Finance,Banking & Financial Services,Personal Finance,Personal Finance,Personal Finance News, Business News, வணிக செய்திகள், ஸ்டேட் வங்கி
SBI Annuity Deposit Scheme: முதலீட்டாளர்கள் பணம் சம்பாதிக்க எப்போதும் பாதுகாப்பான வழிகளையே பார்ப்பார்கள். எனவே தங்கம், அரசின் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள், வங்கி நிரந்தர வைப்பு நிதி, தொடர்ச்சியான வைப்பு (Recurring Deposits) மற்றும் பல உள்ளன. இங்கே பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) பணம் சம்பாதிக்கும் திட்டமான எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்டம் (SBI Annuity Deposit Scheme) குறித்துப் பார்ப்போம். சுருக்கமாக நன்கு திட்டமிடப்பட்ட ஒரு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாக இதை விவரிக்கலாம்.
Advertisment
எஸ்பிஐ வருடாந்திர வைப்பில், முதிர்வு காலத்துக்கு பிறகு தனக்கு ஒரு குறைந்தபட்ச வருவாயாக மாதத்துக்கு ரூபாய் 1,000/- த்தை பெற, எஸ்பிஐ வருடாந்திர வைப்பில் முதலீட்டாளர் ஒரு மொத்த தொகையை (ரூபாய் 25,000/- க்கும் குறையாமல்) முதலீடு செய்ய வேண்டும். அதிகப்பட்ச முதலீட்டுக்கு எந்தவித வரம்பும் இல்லாததால், முதலீட்டாளர் எவ்வளவு மாத வருவாயை விரும்புகிறார் என்பதைப் பொறுத்தது இது. எஸ்பிஐ வருடாந்திர திட்டத்தில் ஒருவர் 36,60,84 அல்லது 120 மாதங்கள் அதாவது 3, 5, 7 அல்லது 10 வருடங்கள் என முதலீடு செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் ஒரு மொத்த தொகையை ஒரு முறை டெப்பாசிட் செய்துவிட்டு அசல் தொகை மற்றும் வட்டி ஆகியவற்றின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதை சேர்த்து அதையே மாதாந்திர தவனையாக திருப்பி பெறலாம், என்பது எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்டத்தின் பெரிய அம்சமாகும். தங்கள் சேமிப்பை பயன்படுத்தி கூடுதல் மாதாந்திர வருமானம் பெற விரும்பும் மக்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.
எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்ட அம்சங்கள்
SEBI ல் பதிவு செய்யப்பட்ட வரி மற்றும் முதலீட்டு நிபுணர் Manikaran Singhal இந்த திட்டத்தின் அம்சங்கள் குறித்துக் கூறுகையில், ”இந்த எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்டத்தில், சமமான மாத தவனைகளில் வைப்புதொகையாளருக்கு ஒரு நிலையான தொகை வழங்கப்படுகிறது, வட்டியுடன் அசல் தொகையும் இதில் அடங்கும். எனவே கணக்கு வைத்திருப்பவர்கள் வைத்திருக்கும் வைப்புக்கள் அவர்களிடமே வட்டியுடன் மாதாந்திர தவனையாக திருப்பி தரப்படுகிறது. கணக்கி திறக்கப்பட்ட அதே நாளில் அடுத்த மாதத்திலிருந்து, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கி வட்டி செலுத்தத் தொடங்குகிறது” என்கிறார்.
எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்ட வட்டி விகிதம்
எஸ்பிஐ நிரந்த்ர வைப்பு திட்டத்தில் கிடைக்கும் அதே வட்டி விகிதம் இந்த எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்டத்துக்கும் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவிகிதம் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil