எவ்வளவு முறை வேண்டுமானலும் எஸ்.பி.ஐ யில் பணம் எடுக்கலாம்.

இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.

எஸ்.பி.ஐ,பணம்
எஸ்.பி.ஐ,பணம்

இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.

எனவே எஸ்.பி.ஐ- யின் சலுகைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1.வங்கிக்கணக்கில் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் ஏடிஎம்-இல் வரம்பற்ற பணப்பரிவர்த்தனையைப் (Unlimited Transaction) பெறலாம்.

2.பணப்பரிவர்த்தனை நிபந்தனைகள் மற்றும் அதற்கான அபராத கட்டணங்கள்: மாநகரங்களில் எப்பொழுதும் ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் பெற்றுக்கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற ஏடிஎம்-இல் 3 முறையும் எடுத்துக்கொள்ளலாம்.

3. மாநகரங்கள் அல்லாத நகரங்களில், எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறை, இதர ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்.

4. இதை விட அதிகமுறை பணம் எடுப்பவருக்கு ரூ. 5 முதல் ரூ.20 வரை + ஜிஎஸ்டி அபராத கட்டணமாக பெறப்படுகிறது.

5. ரூ.25,000க்கும் அதிகமான இருப்புத்தொகையை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு சலுகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் முழுவதும் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால், அவர்கள் நடப்பு மாதத்தில் எஸ்.பி.ஐ & எஸ்.பி.ஐ குரூப் ஏடிஎம்-இல் எவ்வளவுமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

6. இருப்புத்தொகை ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருக்கும் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

7. இந்த வங்கி குரூப் ஏடிஎம் களில் மேற்குறிப்பிட்ட முறைக்கு அதிகமாக பணம் எடுப்பவர்களுக்கு ரூ.10 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்.பி.ஐ தவிர மற்ற ஏடிஎம் களில் குறிப்பிட்ட தடவைக்கு அதிகமாக பணம் எடுத்தால் ரூ.20 வரை அபராதம் விதிக்கப்படும்.

8. இந்த வங்கியில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.

எஸ்பிஐ -யில் பணத்தை சேமிக்க இதைவிட ஒரு சிறந்த நேரம் இருக்க முடியாது.

9.எஸ்.பி.ஐ வங்கியில் வேலை ஊதியம் வரும் வங்கிக்கணக்கிற்கும்(Salary Account) அனைத்து ஏடிஎம்-களிலும் வரையற்ற பணம் பெற்றுக்குக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi money with draw rule and regulation

Next Story
டாப் டக்கர் தூள்.. இந்தியன் வங்கியில் இனி லோன் வாங்குவது ரொம்ப ஈஸி!Indian bank loan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com