sbi mutual fund : தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றும் விளம்பரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விளம்பரங்களும் ஒன்று. அது என்ன மியூச்சுவல் ஃபண்ட் ? அதை எப்படி சேமிப்பது என்று நினைப்பவர்கள் இந்த செய்தியை படியுங்கள். படித்த முடித்த பின் மற்றவர்களுக்கும் உதவும் என நினைத்தால் இதனை பகிரலாம்.
பொதுமக்கள் பலர்,மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நிறுவனமாகவே கருதுகின்றனர்.முன்பே வரையறுக்கப்பட்ட இலக்கிற்குள் முதலீடு செய்ய விரும்பும் மக்களை, ஒன்றாகக் கொண்டு வரக்கூடிய ஒரு முதலீட்டுச் சாதனம் தான் மியூச்சுவல் ஃபண்ட்.
இம்முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டுமல்லாது, அத்திட்டம் ஈட்டிய மூலதன மதிப்பேற்றமும், முதலீட்டாளர்களிடையே அவர்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பொறுத்து, பகிர்ந்தளிக்கப்படும். மூலதனத்தில், நஷ்டம் அல்லது மதிப்பிறக்கம் இருந்தால், அவையும் அந்த ஃபண்டில் பங்கேற்கும் முதலீட்டாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.
1. பொதுவாக, மிகவும் ஆக்டிவ் ஆக நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் நீண்ட காலம் ஆகியும் தங்கள் பெஞ்ச்மார்க்குகளை அடைவதில்லை. ஆனால் சில வருடங்களில் ஆக்டிவ் ஆக நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கள் இன்டெக்ஸ் ஃபண்ட் சகாக்களைக் காட்டிலும் நன்கு செயல்படுகின்றன; சில நேரங்களில், நேர்மாறாகவும் நடக்கலாம்.
2. மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான டிரான்ஸாக்ஷன் செலவுகள் கம்மியாகவே உள்ளன.
3. கவனத்தில் கொள்ளுங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் லாபல் பார்த்தாலும் சரி தவறுகள் நேர்ந்தாலும் சரி நிர்வாகம் பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை இழந்தாலும் மேனேஜர் தன் கட்டணத்தை வாங்காமல் இருப்பதில்லை.
ஒரு முறை தலையை விட்டால் அவ்வளவு தான்.. வங்கியில் பர்சனல் லோன் வாங்கும் போது செய்யக் கூடாத தவறுகள்!
4. மியூச்சுவல் ஃபண்டுகள், சந்தை தொடர்பான அபாயங்கள் மற்றும் சொத்து தொடர்பான அபாயங்கள் போன்ற இரு வகை அபாயங்களாலும் பாதிக்கப்படுகின்றன.