sbi mutual fund : ஆன்லைன் மூலமாக முதலீட்டாளர்கள் எஸ்ஐபி தவணையினைச் செலுத்தலாம் என்ற போதே மியூச்சிவல் ஃபண்ட் எளிமையாக்கப்பட்டுவிட்டது.
மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் அல்லது நீண்ட காலமாகவே முதலீடு செய்பவர்கள் என அனைவரும் யூபிஐ மூலமாக மொத்தமாக அல்லது எஸ்ஐபி தவணையாகப் பணத்தினைச் செலுத்தலாம்.
யூபிஐ சேவையினைப் பயன்படுத்த உங்கள் வங்கி கணக்கில் அதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் கொண்ட போனில் பிம் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் முன்பு விரிச்சுவல் பேமெண்ட் முகவரி போன்ற விவரங்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்
முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் பரிவர்த்தனையினைத் தேர்வு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலமாக முதலீடு செய்து வருபவர்கள் அவர்களது லாக் இன் விவரங்களை அளித்து முதலீட்டு போர்ட்போலியோவை அணுகலாம். அடுத்து முதலீட்டாளர் கூடுதலாக வாங்குதல் அல்லது புதிய திட்டங்களை வாங்கும் போது ஃபண்டுகளைத் தேர்வு செய்து எவ்வளவு முதலீடு செய்ய உள்ளார் என்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
பணத்தினைச் செலுத்தும் தெரிவைத் தேர்வு செய்யும் போது முதலீட்டாளர் யூபிஐ-ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்னர் முதலீட்டாளர் யூபிஐ விரிச்சுவல் ஐடியினை உள்ளிட்டுப் பணத்தினைச் செலுத்த அனுமதிக்கப்படுவார்.