எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைனில் பணம் அனுப்புங்க.. இனி எந்த கட்டணமும் கிடையாது.

இனிமேல் இந்த பிரச்சனை உங்களுக்கு இல்லை

By: Updated: June 12, 2019, 01:18:09 PM

sbi net banking: நெட் பேங்க்கில் எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்துபவரா? நீங்கள் அப்படியானால் இதனை படியுங்கள்.

பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. இந்த வசதிகளுக்காக வங்கி வாடிக்கையாளர்களிடன் இருந்து குறிப்பிட்ட தொகையை உங்களிடம் இருந்து வசூலிக்கின்றன.

நெட் பேங்கிங் என்றாலே அதில் ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறை வசதிகள் இருக்கும். இந்த முறைகளில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் கட்டணம் வசூலிக்கும். அந்த கட்டணம் எவ்வளவு தெரியுமா?

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே இது கொண்டாடத்திற்கான நேரம்… வீட்டு கடன் வாங்குவது ரொம்ப ஈஸி!

1. ஐ.எம்.பி.எஸ் (IMPS)

ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன.

2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)

2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.

3. நெஃப்ட் (NEFT)]

ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 2.5 ரூபாய் + 1 ரூ ஜி.எஸ்.டி தொகை.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + 2 ரூ ஜி.எஸ்.டி தொகை. 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + 3 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படுகின்றன. 5 லட்சத்திற்கும் மேலான பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படும்.

ஆனால் இனிமேல் இந்த பிரச்சனை உங்களுக்கு இல்லை. காரணம் இனி வரும் நாட்களில் நெட் பேக்கிங்கில் அனுப்பப்படும் ட்ரான்க்சேக்‌ஷன் முறையே நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் சேவைகளுக்கு இனி கட்டணமே கிடையாது. இந்த முறைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஆர்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

இனிமேல் வெறும் ஐஎம்பிஎஸ் சேவைகளுக்கு மட்டுமே வங்கிகளை பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi net banking charges for imps neft rtgs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X