SBI Net Banking Online Registration: ஏதேனும் ஒரு தேவைக்காக தினம் வங்கி சேவை பயன்படுத்தும் போது வங்கிக்கு நேரில் செல்ல வேண்டியாகிறது. எனவே வாடிக்கையாளருக்கு ஏற்படும் இந்த சிரமத்தை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் ஆன்லை நெட் பேங்கிங்.
இந்த ஆன்லை நெட் பேங்கிங் சேவையை இந்தியாவில் உள்ள எல்லா வங்கிகளுமே வழங்கி வருகிறது. அதில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ தனது ஆன்லைன் சேவையை சிறப்பாக வழங்கி வருகிறது.
இந்த ஆன்லைன் சேவையை பெற வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை. வங்கிக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் சேவைக்கு பதிவு செய்யலாம்.
SBI Net Banking Registration: எஸ்.பி.ஐ ஆன்லைன் சேவை
வீட்டில் இருந்தபடியே ஆன்லை சேவை துவங்குவதற்கு நீங்கள் உங்கள் கையில் சில பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
1.ஏ.டி.எம் கார்டு
2.வங்கி கணக்கு எண்
3.சிஐஎஃப்
4.உங்கள் வங்கி கிளை எண்
5.வங்கி கணக்கோடு இணைத்திருக்கும் செல்போன் எண்
ஆன்லைன் நெட் பேங்கிங் வசதியை பெறுவதற்கு எப்படி பதிவு செய்வது?
ஒன்று எஸ்.பி.ஐ வங்கியின் இணையதளம் பக்கமான www.onlinesbi.com அனுகவும். பின்னர் அந்த பக்கத்தில் இருக்கும் புதிய பதிவு ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் ஒரு சிறிய பாப் அப் தோன்றும். அதில் சில விவரங்களை நீங்கள் பதிவிட வேண்டும்.
அந்த பாப் அப் மெனுவில், உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்யுங்கள். அதன் பிறகு, சிஐஎஃப் எண், வங்கி கிளை எண், நீங்கள் இருக்கும் நாடு ஆகிய விவரங்களை பதிவிட வேண்டும்.
இறுதியாக உங்கள் செல்போனுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதை பதிவிடுங்கள்.
உங்களிடம் ஏடிஎம் கார்டு இருந்தால் உடனடியாக ஆன்லைன் சேவை பதிவாகிவிடும்.
முதலில் இந்த பக்கம் ஒரு தற்காலிக பயணாளி கணக்கு பெயரை கொடுக்கும். பின்னர் நீங்கள் தான் உறுதியான யூசர் நேம் மற்றும் பாஸ்வர்டு கொடுக்க வேண்டும்.
இறுதியாக அந்த கணக்கு பதிவின் யூசநேம் மற்றும் பாஸ்வர்டு பதிவானதும், இணையத்தளம் உங்கள் வங்கி கணக்கின் பக்கத்திற்கு இட்டுச் செல்லும்.
இதன் மூலம் உங்கள் வங்கியின் கணக்கும், இணையதளப் பக்கமும் இணைக்கப்படும். பின்னர் உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும், இணையதளம் மூலம் செய்துக் கொள்ளலாம்.