Advertisment

எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்துவோரா நீங்கள்?

பரி­வர்த்­தனை, மின் கட்­டணம், தொலை­பேசி கட்டணம் உள்­ளிட்ட பெரும்­பா­லான பில் தொகையை நெட் பேங்கிங் வசதி மூலம் செலுத்­தலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi savings account

PMJDY SBI, PMJDY Sbi Bank, PMJDY SBI News, PMJDY Sbi tamil news, PMJDY ஸ்டேட் வங்கி, PMJDY பாரத ஸ்டேட் வங்கி, PMJDY எஸ்.பி.ஐ

'நெட் பேங்கிங்’ வசதி மூலம், பணப் பரி­வர்த்­தனை மேற்­கொள்­வதோடு, பல­வி­தங்­களில் வங்கிச் சேவை­களை பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

Advertisment

நெட் பேங்கிங் வச­தியை பயன்­ப­டுத்தும் போது, வங்­கிகள் அதற்­கான இணை­ய­த­ளத்தை அமைத்­துள்ள விதத்தை சரி­யாக புரிந்து கொள்ள வேண்டும். முதலில், வங்­கி­களின் இணை­ய­தள அமைப்பை புரிந்து கொண்டால், எந்­த­தெந்த சேவையை எப்­படி அணு­கலாம் என்­பதை தெரிந்துக் கொள்­ளலாம்.

பரி­வர்த்­தனை, மின் கட்­டணம், தொலை­பேசி கட்டணம் உள்­ளிட்ட பெரும்­பா­லான பில் தொகையை நெட் பேங்கிங் வசதி மூலம் செலுத்­தலாம். நெட் பேங்கிங்கில் ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறை வசதிகள் இருக்கும். இந்த முறைகளில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூலிக்கும்.

1. ஐ.எம்.பி.எஸ் (IMPS)

ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10,000 ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது. 10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன.

2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)

2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.

டென்ஷன், அபராதம் எந்த தொல்லையும் இல்லை… எஸ்பிஐ- யில் அட்டகாசமான சேமிப்பு திட்டம்!

3. நெஃப்ட் (NEFT)

ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 2.5 ரூபாய் + 1 ரூ ஜி.எஸ்.டி தொகை.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + 2 ரூ ஜி.எஸ்.டி தொகை. 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + 3 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படுகின்றன. 5 லட்சத்திற்கும் மேலான பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment