sbi netbanking account state bank account : எந்த வழியில் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பது பொதுமக்களுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது.
Advertisment
டெபாசிட்டில் போதிய வட்டி வழங்கப்படுவதில்லை என கருதுவோருக்கு, சேமிப்பு கணக்குகளின் வாயிலாகவே நல்ல வட்டி கொடுப்பதற்கு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) சேவிங்ஸ் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சேவிங்ஸ் பிளஸ் திட்டம் என்பது டெபாசிட் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம். இதன் கீழ் சேமிக்கப்படும் தொகையில் குறிப்பிட்ட அளவுக்கு மேலான தொகை ஆட்டோமேட்டிக்காக கால டெபாசிட்டுகளாக (Term deposit) மாற்றப்படும். அதாவது, உங்கள் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தில் மிகைத் தொகை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு பரிமாற்றப்பட்டு அதன் மூலம் வருமானம் கிடைக்கும். இதில் எந்தவிதமான ரிஸ்கும் கிடையாது என்பது சிறப்பம்சம்.
ஸ்பிஐ சேவிங்ஸ் பிளான் கணக்கு துவங்குவதற்கு ஆதார் உள்ளிட்ட கேஒய்சி ஆவணங்கள் தேவை. தனியாகவும், கூட்டாகவும் இந்தக் கணக்கை துவங்கலாம். சேமிப்புக் கணக்கில் இருந்து எவ்வளவு தொகை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு போக வேண்டும் என்பதையும் முன்கூட்டியே குறிப்பிட வேண்டும்.
1-5 ஆண்டுகள் டெபாசிட் காலம், டெபிட் கார்டு, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், எஸ்.எம்.எஸ் அலர்டுகள், ஆண்டுக்கு 25 இலவச செக், பாஸ் புக் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், மாத சராசரி பேலன்ஸ் தொகையும் பராமரிக்க தேவையில்லை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”