sbi netbanking sbi net banking sbi mobile : நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை எப்படி தங்களது சேமிப்பு கணக்குடன் இணைப்பது என பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை கொண்டுள்ளது.
Advertisment
இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றி நீங்கள் அறியலாம். நீங்கள் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் போது உங்களது மொபைல் எண்ணுக்கு செய்தி வரும். ஆனால் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்வதை யாராலும் தடுக்க முடியாது.
எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள ஏடிஎம் திருத்தங்களில், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும் போது ஓடிபி எண் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும்
உங்களது மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை மாற்றியுள்ளீர்களா? ஆம் எனில் அதை வங்கிகளில் உடனே புதுப்பியுங்கள், ஏனெனில் எந்தவொரு எங்களது முக்கியமான தகவலையும் இழக்க வேண்டாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. வங்கி கணக்கில் எப்படி மாற்றுவது? எஸ்பிஐ வங்கி இணைய சேவையை லாகின் செய்து, அங்கு உங்களது மை அக்கவுன்ட்ஸ் & புரஃபைல் ஆப்சனை க்ளிக் செய்யவும். அதில் புரஃபைல் லிங்கை க்ளிக் செய்து உங்களது தனிப்பட்ட விவரம் மற்றும் மொபைல் எண்ணை பகுதிக்கு க்ளிக் செய்து செல்லவும். இங்கு திருத்து ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”