sbi netbanking : வீடுகளில் மட்டும் ஆட்சி கொண்டிருந்த இந்தியப் பெண்கள் இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஆட்சி செலுத்தி வருகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் பெண்களை அதிகம் நம்பியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இது இந்திய நாட்டிற்கு வலுவான வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லுவதற்கு ஒர் அறிகுறி. நிதி மற்றும் வங்கி துறையிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் அதிகபடியான பெண்கள் வங்கியியல் துறை மற்றும் பண மேலான்மையில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் நிறைய திட்டங்களை இன்றைய வங்கிகள் செய்து வருகின்றனர். இதில் பல வங்கிகள் பெண்களுக்கு பலன் தரக்கூடியதாகவும் தனித் தன்மையான வசதிகளை சில வழங்கி வருகின்றன. இப்படி பெண்களுக்காக சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கும் வங்கிகள் குறித்த முழு விபரம்.
நீங்கள் சொந்த வீடு கட்ட கைக்கொடுக்கிறது எஸ்பிஐ!
ஐசிஐசிஐ வங்கி
அட்வான்டேஜ் பெண்கள் சேமிப்பு கணக்கு – இந்தியாவின் எந்தவொரு பகுதியில் வசித்து வரும் பெண்களுக்கும் இந்த அட்வான்டேஜ் பெண்கள் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். ஜீரோ பேலன்ஸ் கணக்குடன், இலவசமான செக் புத்தகமும் இந்த கணக்கிற்கு வழங்கப்படுகிறது.
இந்த தொடர் வைப்பு கணக்கில் ரூ.10,000 இருக்க வேண்டும்.
இணையம் மற்றும் மொபைல் வழி வங்கி சேவைகளை இயல்பாகவே வழங்கும் கணக்காக இது உள்ளது. இந்த வசதியின் மூலம் இந்தியாவின் எந்தவொரு பகுதியில் இருந்தும் பயன்படுத்தலாம். எண்ணற்ற தள்ளுபடிகளையும் மற்றும் சலுகைகளையும் அதன் சர்வதேச டெபிட் கார்டுகள் வழியாக வழங்கும் வகையில் இந்த கணக்கு உள்ளது. 18 வயது நிரம்பிய பெண்கள் இந்த கணக்கை தொடங்கலாம்.