எஸ்பிஐ கட்டண மாற்றங்கள் - இதைத் தெரிந்து கொண்டு வங்கிக்கு சென்றால் பயன் பெறலாம்
SBI : எஸ்பிஐ கோல்டு டெபி கார்டுக்கு ஜி.எஸ்.டி மற்றும் 100 ரூபாய் கட்டணமாகவும், இதே பிளாட்டினம் கார்டுகளுக்கு ஜி.எஸ்.டி + 300 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்
sbi netbanking : பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ க்கு எப்போதுமே தனி பெரும். வாடிக்கையாளர்கள் சேவை தொடங்கி கடன் திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள் என பலவற்றிற்கும் பொதுமக்கள் எஸ்பிஐ வங்கியை நாடி செல்கின்றனர். எஸ்பிஐ வங்கி வங்கி சேவையில் மிகச் சிறந்த இடத்தை பிடித்திருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் தான் இந்த முக்கியமான தகவல். பழைய ஞாபகத்தில் இருக்காதீர்கள். எஸ்பிஐ வங்கியில் அக்டோபர் 1 முதல் புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. அதைப்பற்றி விரிவாக தகவல்கள் இதோ.
அக்கவுண்ட் ஓபன் செய்தால் இனி டெபிட் கார்டு இலவசம் இல்லை. எஸ்பிஐ கோல்டு டெபி கார்டுக்கு ஜி.எஸ்.டி மற்றும் 100 ரூபாய் கட்டணமாகவும், இதே பிளாட்டினம் கார்டுகளுக்கு ஜி.எஸ்.டி + 300 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மொபைல் வங்கி பரிவர்த்தனைகளுக்கு இனி வரம்பற்ற சேவையை பெற முடியும். மினிமல் பேலன்ஸ் 5,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 3,000 இருப்பு தொகையில் 50 சதவிகிதம் பராமரிக்காதவர்களுக்கு, 10 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியும், இதே 75 சதவிகிதம் இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கு 15 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்
சேமிப்பு கணக்கில் 25,000 ரூபாய் இருப்பு தொகையாக வைத்திருப்பவர்கள் மாதத்தில் 5 பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம். வங்கி கிளையை தவிர, மற்ற கிளைகளில் செய்யப்படும் டெபாசிட் செய்யப்படுவதற்கான அதிகபட்ச வரம்பு 2 லட்சம் ரூபாய்.சேமிப்பு கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு, முதல் மூன்று பரிமாற்றங்களுக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை . 50,000 – 1,00,000 லட்சம் வரை இருப்பு தொகையாக வைத்துள்ளவர்கள் 15 முறை கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்.