sbi new deposit scheme : எஸ்பிஐ-யில் வழக்கமான வைப்புத் தொகை கணக்குகளுக்கு மாற்றமாக, எம்.ஓ.டி.எஸ். அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் ரூ. 1,000-ன் மடங்குகளாக பணத்தைஎடுத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள தொகை சேமிப்பு கணக்கில் வைப்புத் தொகையாக இருக்கும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
1.குறைந்தபட்ச பேலன்ஸ்: ஒவ்வொரு அக்கவுன்ட்டிலும் குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ. 1,000- ஆக இருக்க வேண்டும். அடுத்தடுத்த டெபாசிட் தொகைகள் ரூ. 1,000-ன் மடங்குகளாக இருக்க வேண்டும். இதற்கு உச்ச பட்ச தொகை என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
2. கால அளவு: குறைந்தபட்ச கால அளவு ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளுக்கு அதிகபட்ச கால அளவு 5 ஆண்டுகள்.
3. வட்டி விகிதம்: மற்ற திட்டங்களுக்கு என்ன வட்டி விகிதத்தை வழங்குகிறதோ அதே வட்டியை எம்.ஓ.டி.எஸ். திட்டத்திற்கும் ஸ்டேட் வங்கி வழங்குகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதியில் இருந்து வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. ரூ. 1 கோடிக்கு குறைவாக டெபாசிட் செய்யும் பணங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரண்ட் அக்கவுண்டில் இத்தனை வசதி இருக்கும் போது எதுக்கு பாஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்?
4. முன்முதிர்வு திரும்ப பெறுதல்: எம்.ஓ.டி.எஸ். வங்கி கணக்குகளுக்கு முன்முதிர்வு திரும்ப பெறுதல் பொருந்தும். ஆனால், வைப்புத் தொகை கணக்குகளுக்கு விதிகள் பொருந்தும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.