sbi new loan : sbi வங்கி, சேமிப்புக் கணக்கு (Savings Account), நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit), தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) என அனைவருக்கும் பரீட்சியமான கணக்குகள் தவிர, சேவிங்ஸ் பிளஸ் என்ற கணக்கும் ஸ்டேட் வங்கியில் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.
மேலும் பல முதலீட்டு வாய்ப்புகளை (Multi Option Deposit) இந்தக் கணக்கில் வழங்குவதால் இது ‘Savings Plus Account’ என்று அழைக்கப்படுகின்றது.
சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் அனைவரும் சேவிங்ஸ் பிளஸ் கணக்கையும் தொடங்க முடியும்.
இதில் குறைந்தபட்சம் 35,000 ரூபாய்க்கு மேல் கணக்கில் பணம் சேர்ந்தால்தான் பிற முதலீடுகளுக்கு பணத்தை மாற்ற முடியும்.
ரூ.35,000க்கு அதிகமாக சேரும் பணம் ஆயிரம், ஆயிரம் ரூபாய்களாக மற்ற முதலீட்டுக்கு மாற்றப்படும்.
இந்நிலையில்,சாதாரண சேமிப்புக் கணக்கிற்கு வழங்கப்படும் வட்டியே இந்த கணக்குக்கும்
கிடைக்கும்.மற்ற முதலீடுகளின் அளவு குறைந்தபட்சம் ரூ.10,000 ஆக இருக்க வேண்டும். இதன் முதலீட்டுக் காலம் 1 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
மெட்ரோ நகரங்களில் சேவிங்ஸ் பிளஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தது மாதம் சராசரி (Average
Minimum Balance) ரூ.3000 ரூபா வைத்திருக்க வேண்டும். புறநகர்களில் இந்தக் கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ரூ.2000ம் கிராமப்புறங்களில் ரூ.1000மும் இருப்புத்தொகை இருக்க வேண்டும்.
இதில் இருப்புத் தொகையின் மாத சராசரி (AMB) 3000 ரூபாய்க்கு குறைவாகிவிட்டால், அது இந்தக் கணக்குடன் இணைந்துள்ள முதலீட்டுத் திட்டத்திலிருந்து பணம் கழிக்கப்படும்.
ATM கார்டுக்கு Bye bye...YONOவுக்கு Hai - சொல்கிறது எஸ்.பி.ஐ
இது முதலீட்டைப் பாதிப்பதோடு வங்கிக் கணக்கு வைத்துள்ள இடத்தைப் பொருத்து அபராதமும்
விதிக்கப்படும்.மேலும் ஏடிஎம் கார்டு, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற வசதிகளும் இந்தக் கணக்குக்கு உண்டு. இந்த சேவிங்ஸ் பிளஸ் கணக்கின் மூலம் முதலீடு
செய்வதை பொறுத்து வங்கிக் கடனும் பெற முடியும்.