5 லட்சம் வரை குறைந்த வட்டிக்கு கடன்; இந்த நேரத்தில் எஸ்.பி.ஐயின் இந்த திட்டம் மிகவும் தேவை

தற்போது நிதி பற்றாக்குறையால் பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த கடனானது மிகப்பெரிய அளவில் உதவும் என்று வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

SBI New Personal Loan From Rs 25,000-5 Lakh with Low Interest : கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்காக தற்போது சிறப்பு கடன் திட்டம் ஒன்றை வழங்குகிறது எஸ்.பி.ஐ. வங்கி. ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை நீங்கள் கடன் பெற்றுக் கொள்ள முடியும் . கவாச் என்ற தனிநபர் கடனை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக நீங்கள் இந்த கடனை பெற்றுக் கொள்ள முடியும்.

ரூ. 5 லட்சம் வரை நீங்கள் பெறும் இந்த கடனுக்கு வருடத்திற்கு 8.5% வட்டி மட்டுமே. 60 மாதங்களில் திருப்பி அடைக்க வேண்டிய இந்த கடனுக்கு 3 மாதங்கள் வரை மொராட்டோரியமும் உண்டு. தற்போது நிதி பற்றாக்குறையால் பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த கடனானது மிகப்பெரிய அளவில் உதவும் என்று வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்டாயமாகிறது “ஹால்மார்க்” – பொதுமக்களுக்கு இதனால் என்ன ஆதாயம் தெரியுமா?

எஸ்.பி.ஐ வங்கிக்கு நீங்கள் நேரில் சென்று இந்த கடனை பெற்றுக் கொள்ள்ள இயலும். அல்லது யோனா மொபைல் செயலி மூலமும் விண்ணப்பித்தும் பெற்றும் கொள்ளலாம். கடன் உங்களின் வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும். வேலைக்கு செல்லும் நபர்கள், நான் – சாலரிட் நபர்கள், ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்கள் இந்த இந்த கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை பெற கொரோனா பரிசோதனை முடிவு சான்றுதலை சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு, வேலையில் இருந்து பணிநீக்கம் அல்லது சம்பளக்குறைப்பு போன்ற காரணங்களால் நாம் அவதிப்பட்டு வருகின்ற நிலையில், பணம் இல்லாமல் நம்முடைய உற்ற உறவினர்களுக்கு கோவிட் சிகிச்சை அளிக்க இயலாத சூழலை தவிர்க்க நிச்சயமாக இந்த கடன் வசதி உதவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi new personal loan from rs 25000 5 lakh with low interest

Next Story
7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com