எஸ்பிஐ-யின் அறிவிப்பு  குறித்து தெரியுமா?

மேலும் ரூ.25000 மினிமம் பேலன்சாக வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்

By: Published: October 3, 2019, 6:05:10 PM

வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவில் மிகச்சிறந்த வங்கி சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, வாடிக்கையாளர்கள் அடிக்கடி சந்தித்து வரும் பிரச்சனையான ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக மற்ற வங்கி ஏஎடிஎம்-களில் பணம் எடுத்து வருகின்றனர்.

இது இனிமேல் ஒருவர் தன் கணக்கில் ஒரு குறைந்த பட்ச தொகை வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.25000 மினிமம் பேலன்சாக வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம். அதேபோன்று 1லட்சம் அல்லது அதற்கு மேல் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்.பி.ஐ வங்கி மேலும் தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.25,000க்கும் குறைவாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வங்கியின் சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்புத் தொகை வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் மே 1-ம் தேதி முதல் 3.25 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எஸ்பிஐ வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi new rules sbi cash withdrawl amount sbi interst rate sbi home loan news sbi customer loans

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X