scorecardresearch

கூடுதல் வட்டி, 25 செக் லீஃப் இலவசம்… SBI புதிய SB அக்கவுண்ட் வசதிகளை கவனித்தீர்களா?

ரிஸ்க் எடுக்காமல் நல்ல வருமானம் ஈட்ட விரும்புவோருக்காகவே எஸ்பிஐ வங்கி சேவிங்ஸ் பிளஸ் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

SBI bank tamil news sbi multi-option deposit scheme

எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைப்பு மூலம் அதிக பணம் ஈட்ட வேண்டும் என நினைத்தால் எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ் கணக்கு ஒரு நல்ல தேர்வாக உள்ளது.

எஸ்பிஐ சேமிப்பு கணக்கு திறக்க தகுதியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், எஸ்பிஐ சேவிங்ஸ் பிளஸ் (Savings Plus) என்ற கணக்கை வழங்குகிறது. இந்த கணக்கு Multi Option Deposit திட்டத்துடன் இணைக்கப்பட்டது. இந்த வங்கி கணக்கில் வாடிக்கையாளர்களின் உபரி பணம் தானாகவே நிரந்தர வைப்பாக (fixed deposits FD) மாறிவிடும். இது தான் இந்த கணக்கின் மிகப்பெரிய பிளஸ் பாயின்டே.

எஸ்பிஐ நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம், இந்த உபரி வைப்புக்கு கிடைக்கும். எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கு குறித்த விவரங்கள், https://sbi.co.in/web/personal-banking/accounts/saving-account/savings-plus-account என்ற பக்கத்தின் மூலம் அறியலாம். மற்ற சேமிப்பு கணக்குகளில் கிடைக்கும் அதே சலுகைகள் இதிலும் கிடைக்கும்.

எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 35,000 ரூபாயாக இருக்க வேண்டும். அப்படியென்றால் ஆரம்ப குறைந்தபட்ச உபரி தொகை ரூ.10,000 ஆக இருக்க வேண்டும், அது தானாக எஸ்பிஐ FD ஆக மாறிவிடும். அதிலிருந்து கூடுதல் 1,000 ரூபாய் எஸ்பிஐ எப்டி ஆக மாறிவிடும்.

டெபாசிட் காலம் 1 முதல் 5 ஆண்டுகள்.

வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு 25 செக் லீஃப் புக் பெற உரிமை உண்டு. அடுத்தடுத்த காசோலைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

சாதாரண எஸ்பிஐ சேமிப்புக் கணக்கைப் போலவே, சேவிங் பிளஸ் கணக்கிலும் ஏடிஎம் கார்டுகள், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் போன்ற பல சேவைகள் உள்ளன.

வாடிக்கையாளர்கள் தங்கள் MODS கணக்கிற்கு எதிராக கடன் பெறலாம்.

இந்த வகை கணக்கின் அதிகபட்ச இருப்புக்கு வரம்பு இல்லை.

இந்த சேவிங்ஸ் பிளஸ் கணக்கை திறக்க ஆதார் உள்ளிட்ட KYC ஆவணங்கள் தேவை.

தனியாகவும்(Individual) கூட்டாகவும் (Joint account) கணக்கை திறந்துகொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi new savings scheme savings plus account details

Best of Express