sbi new scheme : ’ரிவாம்ப்டு கோல்ட் டெபாசிட் ஸ்கீம்’ (R-GDS) என்னும் புதிய பிக்சட் டெபாஸிட் திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
வீட்டில் இருக்கும் தங்கத்தை சந்தை புழக்கத்துக்குப் பயன்படுத்த இத்திட்டத்தை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முதலீடு செய்யப்படும் தங்கம் தங்க பிஸ்கெட், காயின், நகை என எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
தங்கத்தை முதலீடு செய்யும் வாடிக்கையாளர் அவரது ஐடி புரூஃப், போட்டோ காபி, இதர ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
தனி நபர், பங்கு நிறுவனங்கள், பிரியாத இந்து குடும்பம், தனியார் டிரஸ்ட்கள் ஆகியவை தங்கங்களை இந்த திட்டத்தில் முதலிடு செய்யலாம்.
இதில் மூன்று வகை முதலீடுகள் உள்ளன.
குறுகிய கால முதலீடு (1-3 வருடங்கள்).
நடுத்தர கால முதலீடு (5 -7 ஆண்டுகள்). மத்திய அரசு சார்பாக முதலீடு வங்கியால் பெறப்படும்.
நீண்ட கால முதலீடு (12 - 15 ஆண்டுகள்). மத்திய அரசு சார்பாக முதலீடு வங்கியால் பெறப்படும்.
வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதை பற்றிய விவரங்களை முமுமையாக தெரிந்துக்கொண்டு கடன் பெறுவது சிறந்த ஒன்றாகும். தங்க கடன் மற்றும் தனிநபர் கடன் இரண்டுக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வட்டி விகிதத்தில் தான் கடன் அளிக்கப்படுகிறது.
இது கொண்டாட்டத்திற்கான நேரம்.. வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ!
நகை கடன் அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை அளிக்கப்படும். உடனடியாக பணம் தேவைப்படும் நேரங்களில் தங்க கடனே எளிமையாக கிடைக்கும். தங்கள் கடனை ரூ.1000 முதல் பெறலாம்.