நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, 45 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அவ்வப்போது, வாடிக்கையாளர்கள் நலனுக்கான புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது வீட்டில் உட்கார்ந்தப்படியே வங்கி தொடர்பான சேவைகளை பெற இலவச எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்த எஸ்பிஐ, வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். நாங்கள் உங்களுக்கு பணியாற்ற தான் இருக்கிறோம. அவசர வங்கி தேவைகளை பூர்த்தி செய்திட கட்டணமில்லா எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 1800 1234 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 சேவைகளை கட்டணமில்லா எண் மூலம் பெறலாம்
- IVR இல் பேலன்ஸ் மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகளைச் செக் செய்ய முடியும்
- எஸ்எம்எஸ் மூலம் பேலன்ஸ் மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க முடியும்
- ஏடிஎம் கார்டை பிளாக் செய்யவது, அன்லாக் செய்யும் வசதியை அணுகலாம்.
- ATM/Green PIN உருவாக்கலாம்
- பழைய ஏடிஎம் கார்டை பிளாக் செய்த பிறகு, புதிய ஏடிஎம் கார்டை பெற அனுமதிக்கலாம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil