ப்ரோசசிங் கட்டணம் இல்லாமலே வீட்டுக் கடன் – எஸ்.பி.ஐ.யின் புதிய அறிவிப்பு

மேலும் யோனோ செயலி மூலமாக கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மேலும் 5 bps புள்ளிகள் சலுகை வழங்கப்படும். பெண் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

Home loan, house loan, EMI, business news, tamil news, Business news in Tamil

SBI house loan news : மன்சூன் தமக்கா ஆஃபர் என்ற பெயரில் மிகப்பெரிய சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. கடன் வாங்கி வீடு ஒன்றை சொந்தமாக்க வேண்டும் என்று நினைக்கும் பல வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும். இந்த சலுகையின் கீழ் 100% ப்ரோசசிங் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. உண்மையில் வீட்டுக் கடன் வாங்கும் நபர்களுக்கு ப்ரோசசிங் கட்டணமாக 0.40% கடன் தொடகை வசூலிக்கப்படும்.

மேலும் யோனோ செயலி மூலமாக கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மேலும் 5 bps புள்ளிகள் சலுகை வழங்கப்படும். பெண் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தற்போது எஸ்.பி.ஐ. வங்கி வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியானது 6.70% ஆகும். இந்த மன்சூன் டமாக்கா ஆஃபர் இந்த மாதம் 31ம் தேதி வரை வாடிக்கையாளார்கள் பயன்பாட்டிற்காக இருக்கும்.

இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய வங்கியாக வெகு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ. மக்களின் அனைத்துவிதமான தேவைகளுக்கும் கடன் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 5 லட்சம் கோடி ரூபாய் வரை வீட்டுக்கடனுக்காக கொடுத்து புதிய மைல்ஸ்டோன் சாதனையை நிகழ்த்தியுள்ளது எஸ்.பி.ஐ.

SBI இன் ஒருங்கிணைந்த டிஜிட்டல் செயலி – SBI YONO முப்பத்தேழு மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்த பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒரு நாளைக்கு ஒன்பது மில்லியன் நபர்கள் லாக்-இன் செய்கின்றனர். மார்ச் 31, 2021 க்கு முன்பு, இரண்டு மில்லியன் கணக்குகள் இந்த செயலியில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi news alert sbi house loan news sbi online

Next Story
ஆதார் கார்டு தொலைஞ்சு போய்ருச்சா; கவலைய விடுங்க… ஈசியா ஆன்லைனில் டவுன்லோடு செஞ்சுக்கலாம்aadhaar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express