எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன்: மகிழ்ச்சி..! இந்த அப்டேட் பார்த்தீங்களா பாஸ்

SBI News In Tamil: இந்த புதிய திட்டம் தற்போதைய வீழ்ச்சி விலை விகிதத்தில் மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் என வங்கி தெரிவித்துள்ளது.

SBI EMI, SBI Cuts MCLR, எஸ்பிஐ, SBI home loan calculator, SBI EMI status, State Bank Of India, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

SBI Home Loans: இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) Marginal Cost of funds based Lending Rate (MCLR) ஐ 15 basis points (bps) குறைத்துள்ளது. இந்த நடவடிக்கையில் மூலம் benchmark கடன் விகிதம் மே 10 முதல், வருடத்துக்கு 7.40 சதவிகிதம் என்பதிலிருந்து 7.25 சதவிகிதம் என கீழே வரும்.

இது MCLR ல் தொடர்ச்சியாக 12 ஆவது குறைப்பாகும் என பொது துறை வங்கியான எஸ்பிஐ ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக தகுதியான வீட்டு கடன் கணக்குகளின் தவனைகள் (MCLR உடன் இணைக்கப்பட்டது) விலை குறையும் தோராயமாக 30 ஆண்டுக்கான ரூபாய் 25 லட்சம் கடனுக்கு ரூபாய் 255.00 குறையும், என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. MCLR ருடன் தங்கள் கடன்களை இணைத்துள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த நடவடிக்கை பயனளிக்கும்.


இந்த நடவடிக்கை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதன் எம்சிஎல்ஆருடன் கடன்களை இணைத்துள்ள பயனர்களுக்கு பயனளிக்கும் – ஒவ்வொரு முறையும் வங்கி benchmark rate மாற்றங்களைச் செய்யும் போதும் இது மாறும்

கடன் விகிதம் மட்டுமல்லாமல், போதுமான பணப்புழக்கத்தை கருத்தில் கொண்டு எஸ்பிஐ தனது சில்லறை கால வைப்புகளின் (retail term deposits) வட்டி விகிதங்களையும் 3 ஆண்டுகள் வரை 20 bps என குறைத்துள்ளது. மேலும் இது மே 12 முதல் அமலுக்கு வரும்.

தனது மூத்த குடிமக்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விகிதத்துடன் எஸ்பிஐ ஒரு சிறப்பு வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘SBI Wecare Deposit’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் தற்போதைய வீழ்ச்சி விலை விகிதத்தில் மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் என வங்கி தெரிவித்துள்ளது.

இந்த புதிய தயாரிப்பின் கீழ், மூத்த குடிமக்களின் சில்லறை கால வைப்புத்தொகைகளுக்கு கூடுதலாக 30 bps பிரீமியம் ‘5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட tenor களுக்கு மட்டும் செலுத்தப்படும். இந்த புதிய திட்டம் செப்டம்பர் 30 முதல் அமல்படுத்தப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi news in tamil sbi home loan sbi emi status state bank of india cuts mclr

Next Story
ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்பவரா? உங்களை கண்காணிக்க அரசு உத்தரவு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express