Advertisment

ஸ்டேட் வங்கி முக்கிய அறிவிப்பு: இது சலுகையா, ‘ஷாக்’கா?

SBI Tamil News: இது மாதிரியான கோரிக்கைகள் வங்கிக்கு நூற்றுக்கணக்கில் வருகிறது எனவே பணத்தை திருப்பி அளிக்க 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi, sbi loan payment, sbi loan payment deferral, covid 19 outbreak

State bank of india, sbi housing loan emi calculator, sbi home loan emi calculator, பாரத ஸ்டேட் வங்கி, இ.எம்.ஐ, ஸ்டேட் வங்கி கடன்

SBI News: தவனைமுறை கடன் திரும்ப செலுத்துதல் ஒத்திவைப்பு கூடுதல் செலவு பிடிக்கும் என்றும் கடன் தவனைகளை கட்ட திறன் உள்ளவர்கள் தொடர்ந்து கட்ட வேண்டும் எனவும் பாரத ஸ்டேட் வங்கி புதன்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது. கோவிட் -19 பரவல் காரணமாக கடன் வாங்கியவர்கள் கடன் தவனையை திரும்ப செலுத்த மூன்று மாதம் அவகாசம் கொடுத்து உதவ வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் அறிவுறித்தியிருந்ததை தொடர்ந்து இந்த தெளிவுபடுத்துதல் எஸ்பிஐயிடம் இருந்து வந்துள்ளது. கடன் தவனை ஒத்திவைப்பு மார்ச் 1 முதல் மே 31 வரை உள்ள தவனை நிலுவைகளுக்கு பொருந்தும்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த வசதி, கடனுக்கான தவனை செலுத்துவதை ஒத்திவைத்தல் மட்டுமே, தவனை செலுத்துவதை தள்ளுபடி செய்வது அல்ல எனவும் எனவே இதன் விளைவாக சற்று செலவு வரும் எனவும் வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் திரட்டப்படும் கூடுதல் தொகை கடனை திரும்ப செலுத்தும் காலத்தில் மீண்டும் முடிவடையும்.

மார்ச் மாதத்துக்கான கடன் தவனை தொகையை ஏற்கனவே செலுத்தியுள்ள வாடிக்கையாளர்கள் அதை திரும்ப பெற வேண்டுமென்றால் அதற்கான வசதியும் உள்ளது. இரண்டு - மூன்று விதமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்கள் வங்கியிலேயே கடன் கணக்கு, சேமிப்பு கணக்கு மற்றும் current account உள்ள ஒரு வாடிக்கையாளர் ஏற்கனவே எங்களுக்கு standing instructions தந்திருந்தால் அவருடைய சேமிப்பு கணக்கிலிருந்து பணம் மாதாமாதம் கழிக்கப்பட்டு அது எங்கள் கடன் கணக்கில் தவனை தொகையாக வரவு வைக்கப்படும். மார்ச் மாதமும் அது போல் கடன் தவனை தொகை கழிக்கப்பட்டு இருந்தால் அவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் போதும். அவரது சேமிப்பு கணக்கிலிருந்து மார்ச் மாதத்துக்கு கழிக்கப்பட்ட தொகை மீண்டும் அவரது சேமிப்பு கண்க்கில் வரவு வைக்கப்படும்.

அடுத்த வகை கடன் தாரர்கள், அவர்கள் எஸ்பிஐ வங்கியிலிருந்து கடன் வாங்கியிருப்பார்கள் ஆனால் அவர்களது கணக்கு வேறு ஒரு வங்கியில் இருக்கும். எஸ்பிஐ automated clearing house (ACH) வசதியை நிறுத்த சில காலம் எடுக்கும். எனவே வாடிக்கையாளர்கள் மார்ச் மாதம் பிடித்தம் செய்த தவனை தொகையை திரும்ப பெற எழுத்துப்பூர்வமாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். இது மாதிரியான கோரிக்கைகள் வங்கிக்கு நூற்றுக்கணக்கில் வருகிறது எனவே பணத்தை திருப்பி அளிக்க 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment