SBI News In Tamil: திடீர் விபத்துகளிலிருந்து நமது குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க நாம் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை எடுத்துக் கொள்கிறோம். இது ஒரு முதலீடாக இருந்தாலும், நமது மனதில் வரும் முதல் விஷயம் இந்த திட்டத்திற்கு ஏதாவது வரி சலுகைகள் இருக்குமா இல்லையா என்பதுதான். ஆம் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு வரி சலுகை உண்டு. எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டில் உங்களுக்கு கிடைக்கும் வரி சலுகைகள்
பிரீமியம் செலுத்துவதில் வரி சலுகை
வருமான வரி சட்டம் (Income Tax Act, 1961) பிரிவு 80Cன் கீழ் வருமான வரி சலுகை / செலுத்தப்பட்ட பிரீமியம் மீதான விலக்கு கிடைக்கிறது. நிதியாண்டில் செலுத்தப்பட்ட பிரீமியம் காப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தைத் தாண்டினால், நன்மை உறுதி செய்யப்பட்ட தொகையில் 10 சதவீதம் வரை மட்டுப்படுத்தப்படும்.
Tax benefit on maturity/surrender value
சட்டத்தின் பிரிவு 10(10D) கீழ் வருமான வரி விலக்கு முதிர்ச்சி அல்லது சரண்டர் செய்யப்படும் நேரத்தில் கிடைக்கிறது. பாலிசி காலத்தில் எந்த வருடத்திலும் பிரீமியம் உறுதி செய்யப்பட்ட தொகையில் 10 சதவிகிதத்தை தாண்டக் கூடாது என்ற அடிப்படையில்.
Tax benefit on death proceeds
இறப்பு proceeds வரி விதிக்கப்படாது. எனினும் சட்டத்தின் பிரிவு 10(10D)ன் கீழ் இது சில விதிமுறைகளுக்கு உட்பட்டது
TDS on proceeds
சட்டத்தின் பிரிவு 10(10D)ன் கீழ் வரி விதிக்கப்படுகின்ற காப்பீட்டு வருமானம் (proceeds) நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி TDS க்கு உட்பட்டிருக்கலாம். இது இந்தியாவில் வசிப்பவர்களுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் பொருந்தும்.
எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள முன்னனி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது, இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் முன்னனி உலகளாவிய காப்பீட்டு நிறுவனமான BNP Paribas Cardif ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு.
குழந்தைகள் கல்விக்கான தயாரிப்புகள், பராமரிப்பு இல்லாத ஓய்வூதிய திட்டம், நிதி பாதுகாப்பு, குடும்ப பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் வளம் உருவாக்குதல் போன்ற பல தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எஸ்பிஐ லைப் வழங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.