SBI News: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்றால் அது எஸ்பிஐ தான். இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் அடிக்கடி ஷாக் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ஷாக் செய்தி என்றால் அது மினிமல் பேலன்ஸ் குறித்து தான்.
Advertisment
அதாவது இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகையை பராமரிக்க தேவையில்லை.
SBI Minimum Balance இதற்கு முன்பு :
எஸ்பிஐ வங்கியில் இதற்கு முன்பு வரை குறைந்தபட்ச இருப்புத்தொகையாக பெரு நகரங்களில் ரூ.5 ஆயிரமும், மற்ற பகுதியில் ரூ.3 ஆயிரமும் இருந்தது. இதில் வாடிக்கையாளர்கள் மினிமம் பேல்ன்ஸ் தொகையை முறையாக பராமரிக்கவிட்டால் அபராதமும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அப்படி இல்லை.
எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவ்வங்கியின் தலைவர் ரஜ்னீஷ்குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மொத்தம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த அறிவிப்பில் இதுவும் ஒன்று. இனிமேல் ஜாலி தான்.