SBI Online Update, SBI NetBanking, SBI Password, State Bank Of India,
எஸ்பிஐ, எஸ்பிஐ வங்கி
SBI News In Tamil: Tesla வின் CEO Elon Musk தனது ஆண் குழந்தைக்கு X Æ A-12 Musk என்று பெயரிட்டதும் அனைத்து பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியானார். அவர் தேர்ந்தெடுத்த பெயர் அனைவரையும் குழப்பமடையவும், அதே சமயம் ஆச்சர்யப்படுத்தவும் செய்தது. சமூக ஊடகங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் பாரத ஸ்டேட் வங்கியும் கூட அந்த பெயரின் தனித்துவத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளது என்பது இப்போது தெரிகிறது.
Advertisment
நாட்டின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது டிவிட்டர் கணக்கில் Musk மற்றும் அவரது பெண் நண்பர் அவர்களது ஆண் குழந்தையின் பெயரை தனித்துவமாக தேர்வு செய்ததை குறித்து குறிப்பிட்டுள்ளனர். எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களிடம், தங்களது இணைய வங்கி கணக்கின், கடவுச்சொல்லை தனித்துவமானதாக அதே சமயம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயராக இல்லாமல் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளும்படி, டிவிட்டர் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளனர்.
SBI Online: ஸ்டேட் வங்கி பாஸ்வேர்ட்
Advertisment
Advertisements
ஒரு குடும்ப உறுப்பினர்களின் பெயரை கடவுச்சொல்லாக வைத்தால் அது அவர்களது வங்கி கணக்குக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையக்கூடும். செய்தி முக்கியமானது என்றாலும் அந்த செய்தியோடு பகிரப்பட்டுள்ள புகைப்படம் மிகவும் சுவாரஸ்யமானது. பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில் “We like our passwords strong and baby names unique” and shows #xæa12musk being used as a password. “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“Here's a friendly reminder to update your passwords and don't set it as a family member's name!” என்று எஸ்பிஐ யின் டிவிட்டர் போஸ்ட் கூறுகிறது. இந்த செய்தியோடு #ElonMusk, #xæa12musk and #xæa12 போன்ற hashtags கும் கொடுக்கப்பட்டுள்ளது, இது மஸ்கின் (Musk’s) குழந்தையின் பெயரை எஸ்பிஐ தோண்டி எடுப்பதை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியின் போது Elon musk நகைச்சுவை நடிகர் Joe Rogan யிடம் X Æ A-12 Musk என்ற பெயரின் பொருளையும் அதன் உச்சரிப்பையும் விளக்கினார். தனது பங்காளி Grimes தான் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததாகவும் Musk தெளிவுப்படுத்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"