SBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை
State Bank of India MCLR Rates Reduced: பண்டிகை சீஸனை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் இந்தச் சலுகை வழங்கியிருப்பதாக ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது.
SBI Home Loan News In Tamil: பாரத ஸ்டேட் வங்கி தனது வீட்டுக் கடன் பயனர்களுக்கு புதிய சலுகையை இன்று அறிவித்தது. நவம்பர் 10 முதல் இது அமலுக்கு வருகிறது. ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் இது பலன் கொடுக்கும் என்பதால், எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன் பயனர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
Advertisment
இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது கடன் விகிதத்தை குறைத்து இன்று (நவம்பர் 8) அறிவிப்பு வெளியிட்டது. அதாவது MCLR எனப்படும் கடன் விகிதத்தை ஸ்டேட் வங்கி குறைத்திருப்பதலால், வீட்டுக் கடன் விகிதம் குறைகிறது. ஏற்கனவே வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு இது பொருந்தும்.
எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்பின்படி, MCLR விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருக்கிறது. 2019- 2020-ம் நிதி ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி தொடர்ச்சியாக 7-வது முறையாக இப்படி கடன் விகிதத்தை குறைத்திருக்கிறது. ஏற்கனவே கடந்த அக்டோபர் 9-ம் தேதி MCLR விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது எஸ்.பி.ஐ. அதன் மூலமாக வீட்டுக் கடன் விகிதம் 8.05 சதவிகிதம் ஆனது. தற்போது மேலும் சலுகை அறிவித்திருப்பதால், நவம்பர் 10 முதல் வீட்டுக் கடன் விகிதம் 8 சதவிகிதம் ஆகிறது.
பண்டிகை சீஸனை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் இந்தச் சலுகை வழங்கியிருப்பதாக ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது. அதே சமயம் ஃபிக்சட் டெப்பாசிட்களுக்கான வட்டி விகிதமும் குறைகிறது.