SBI Online News, SBI Online Tamil News, SBI Online Tamil Nadu News, State Bank Of India, பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் வங்கி
SBI News, SBI Card Change @sbionline.com.in: பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? இந்த முக்கியமான தகவல் உங்களுக்குத்தான்! நீங்கள் வைத்திருக்கும் ‘டெபிட் கார்டு’ பழைய ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ வகையை சேர்ந்ததா? அதை மாற்றிக்கொள்ள கெடு கொடுக்கப்பட்டாகிவிட்டது. உடனே மாற்றிக் கொள்ளுங்கள். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு தொடருங்கள்.
Advertisment
ஆன் லைன் பேங்கிங் ஃப்ராடுகளை தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வணிக வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியிருக்கிறது. ஏடிஎம்.களில் பணம் எடுக்க பயன்படுத்தப்படும் பழைய ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ டெபிட் கார்டுகளை மாற்றிவிட்டு, பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த இ.வி.எம். சிப் அடிப்படையிலான டெபிட் கார்டுக்கு மாறவேண்டும் என்பதே அந்த அறிவுறுத்தல்.
SBI Card Change @sbionline.com.in: கட்டணம் கிடையாது.
அதன்படி எஸ்.பி.ஐ. (ஸ்டேட் வங்கி) தனது வாடிக்கையாளர்கள் இந்த மாதம் (டிசம்பர் 2019) 31-ம் தேதிக்குள் பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் டெபிட் கார்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறது. புத்தாண்டு முதல் (ஜனவரி 1) பழைய வகை டெபிட் கார்டுகளின் இயக்கம் நிறுத்தப்படும் என்றும் ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது.
Advertisment
Advertisements
கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்க வாடிக்கையாளர்கள் உடனடியாக இண்டர்னெட் பேங்கிங் மூலமாகவோ, யோனோ ஆப் மூலமாகவோ, அல்லது தாங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஸ்டேட் வங்கி கிளையிலோ உடனடியாக பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் டெபிட் கார்டை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது.
'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி
ஸ்டேட் வங்கியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வாடிக்கையாளர்கள் உடனடியாக தெரிந்து செயல்படுத்திக் கொள்வது நல்லது. மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம்... பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் டெபிட் கார்டு மூலமாக புத்தாண்டு முதல் பணம் எடுக்க முடியாது.