இப்படியொரு வசதியெல்லாம் எஸ்பிஐ - யில் மட்டுமே! நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

மற்றொரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

SBI offers : பொதுத்துறை வங்கியில் சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கி முதியவர்கள் சேவையில் மற்றொரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதியோர் சேமிப்புத் திட்டம் ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்துகிறது, அது குறித்த கூடுதல் தகவல்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ-யில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்!

இத்திட்டத்தை ‘SBI Senior Citizen Savings Scheme'(SCSS) என்று அழைக்கின்றனர்.

இத்திட்டத்தின் அம்சங்கள் :

1. இத்திட்டத்தில் சேர, அந்த தனி நபர் 60 வயதை எட்டியவராக இருக்க வேண்டும். இல்லையெனில் 55 வயது முதல் 60 வயதிற்குள், சிறப்பு சலுகைகள் மூலம் ஓய்வு பெற்றவராகவோ இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2. இத்திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பணம், 8.7 சதவீத வட்டி விகிதத்தில், கால் ஆண்டு தேதி அட்டவணையின் (March 31/ June 30/ september 30/ December 30) அடிப்படையில் கொடுக்கப்படும்.

3. இந்த பணத்தை காசோலையாகவோ, டிடியாகவோ, ஒரு லட்சத்திற்கு கீழ் இருந்தால் பணமாகவே வங்கியில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. முதிர்ச்சி ஆண்டு முடிவடைந்த பிறகு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை பயனாளர்கள் நீட்டிப்பு செய்துகொள்ளலாம்.

5. இந்த திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்துகொள்பவர்களுக்கு நாமினிக்களை தேர்வு செய்யும் உரிமை உள்ளது. ஒரு நாமினியோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிக்ககளையோ அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close