கம்மி வட்டியில் பர்சனல் லோன், கார் லோன்: SBI தீபாவளி ஆஃபர் பாத்தீங்களா?
இந்த சலுகைகள் அனைத்தையும் நீங்கள் பெர விரும்பினால், நீங்கள் எஸ்.பி.ஐ யோனோ செயலி மூலம் வங்கி லோன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அல்லது எஸ்.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
SBI offers these benefits on car loan : இந்த ஆண்டு தீபாவளி தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறக்கும் படி அமைய எஸ்.பி.ஐ வங்கி சிறப்பு சலுகைகளுடன் கூடிய அட்டகாசமான ஆஃபர்களை வழங்கியுள்ளது. தீபாவளிக்கு தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துகளை கூறிய எஸ்.பி.ஐ., ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி.ஐ கார் லோன், பர்சனல் லோன் மற்றும் தங்கக் கடன் சலுகைகளுடன் தீபங்களின் திருவிழாவை கொண்டாடுங்கள் என்று கூறியுள்ளது.
Advertisment
இந்த அனைத்து கடன் வசதிகளுக்கும் ஜீரோ ப்ரோசசிங் கட்டணத்தை அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. மேலும், பெர்சனல் லோனுக்கான வட்டியை ஆண்டுக்கு 9.6% என்றும், கார் லோனுக்கான வட்டியை 7.25%-ஆகவும், தங்கக் கடனுக்கான வட்டியை 7.50%ஆகவும் அறிவித்துள்ளது.
இந்த தீபாவளியின் போது எஸ்.பி.ஐ வங்கி ஜீரோ ப்ரோசசிங் கட்டணத்தில் வீட்டுக்கடன் வசதிகளை வழங்குகிறது. மேலும் கடன் தொகை எவ்வளவு இருந்தாலும் எஸ்.பி.ஐ கிரெடிட் ஸ்கோர்களுடன் இணைக்கப்பட்ட ஹோம் லோன்களுக்கு 6.70% வட்டியை வழங்குகிறது. இதற்கு முன்பு ரூ. 75 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கினால் அவர்களுக்கு வட்டியானது 7.15% ஆக இருந்தது. தற்போது அது 6.70% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
45 அடிப்படைப் புள்ளிகள் தானே குறைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். இந்த குறைப்பு உங்கள் வீட்டுக் கடனில் 8 லட்சம் வரை வட்டி கட்டுவதை குறைத்து உங்களுக்கு பெரிய அளவில் உதவுகிறது. சொந்தமாக தொழில் நடத்தும் நபர்களுக்கு, சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களைக் காட்டிலும் 15 அடிப்படை புள்ளிகளில் தான் வட்டி வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த வேறுபாட்டையும் நீக்கி அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி.
இந்த சலுகைகள் அனைத்தையும் நீங்கள் பெர விரும்பினால், நீங்கள் எஸ்.பி.ஐ யோனோ செயலி மூலம் வங்கி லோன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அல்லது எஸ்.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil